பதிவு செய்த நாள்
25 நவ2015
13:03

சிறிய ரக, எஸ்.யு.வி.,க்களின் விற்பனை அதிகரித்திருக்கும் காலம் இது. அதனால், ‘காற்றுள்ளபோதே துாற்றிக் கொள்’ என, முடிவெடுத்துள்ள, மாருதி சுசூகி நிறுவனம், புதிய, எஸ்.யு.வி.,யை களமிறக்க உள்ளது. ‘போர்டு – எகோஸ்போர்டு, மகிந்திரா – டி.யு.வி., 300’ ஆகிய சிறியரக எஸ்.யு.வி.,க்கள் சக்கை போடு போட்டு வரும் இந்த நேரத்தில், தன், எஸ்.யு.வி.,யை அறிமுகம் செய்வதற்காக, சோதித்து பார்க்கும் பணிகளை துவங்கி இருக்கிறது.
இது தோற்றத்தில், ‘சுசூகி விடாரா’ போல் காணப்படுகிறது. இதில், ‘ஸ்மார்ட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்,’ 16 அங்குல, ‘அலாய் ரிம்’ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் என, இரு வகைகளிலும் கிடைக்கிறது. இதன் பெயர் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த சில மாதங்களில் அறிமுகம் ஆகும் போது, போட்டி நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில், இதன் விலை நிர்ணயிக்கப்படலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|