பதிவு செய்த நாள்
25 நவ2015
13:04

சமீபத்தில், மலேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட, ஆடி நிறுவனத்தின், ‘கியூ 7 ’சொகுசு எஸ்.யு.வி., வாகனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய அறிமுகம், கரடு முரடான சாலையில் செல்ல உகந்ததாகவும் இருக்கும். அதே நேரத்தில், குடும்பத்துடன் செல்லக் கூடிய, மேட்டுக்குடி தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘கிரேட் குவாட்ரோ’ எஸ்.யு.வி.,யின் அடுத்த மாடல் போல் இந்த, ‘கியூ 7’ பல அம்சங்களை பெற்றிருக்கிறது. இதன் நீளம், 5,050 மி.மீ., – அகலம், 1,970 மி.மீ., ஆகும். கிரேட் குவாட்ரோ வாகனத்தை விட, இதன் எடை, 325 கிலோ குறைவு. எட்டு கியர்களை கொண்ட இந்த வாகனத்தில், 333 குதிரை திறனை உருவாக்கும், 3.0 டி.எப்.எஸ்.ஐ., வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மலேஷியாவில் இதன் அறிமுக விலை, 91.06 லட்சம் ரூபாய்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|