பதிவு செய்த நாள்
26 நவ2015
13:08

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள, ‘ஹேட்ச்பேக்’ ரக காரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ‘சிகா’ என, பெயரிடப்பட்டுள்ள அந்த காரை தவிர்த்து மேலும், ஒரு சிறிய, ‘செடான்’ ரக காரையும் அறிமுகப்படுத்தும் பணிகளை, டாடா நிறுவனம் துவங்கியுள்ளது.
இரண்டு கார்களும், புதிய மாடல்கள் என்ற போதிலும், டாடாவின் பிரபல மாடலான, ‘இண்டிகா’ காரின் தாக்கத்தை இவற்றிலும் காண முடியும். இண்டிகாவின், எக்ஸ்.ஓ., தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இவை உருவாகி வருகின்றன. இண்டிகா காரின், ‘வீல் பேஸ், பெடல் பாக்ஸ்’ போன்ற சில அம்சங்களை தவிர்த்து, மற்ற அனைத்தும் மாற்றம் செய்யப்படுகிறது. இண்டிகா காருக்கு தோற்றப் பொலிவு குறைவு என்ற கருத்து நிலவுவதால், ‘ஸ்டைல்’ அம்சங்களுக்காக, டாடா நிறுவனம் இதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது. அதனால், புதிய கார்கள் அசத்தலாக இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|