பதிவு செய்த நாள்
26 நவ2015
13:08

ஹுண்டாய் நிறுவனம், ஜூலையில் அறிமுகப்படுத்திய சிறிய வகை, எஸ்.யு.வி.,யான, ‘கிரெட்டா’ கார், இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘‘இந்தியாவில் இதுவரை, 70 ஆயிரம் கிரெட்டா கார்கள் விற்பனையாகி உள்ளன. லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு போன்ற சர்வதேச சந்தைகளில், 15 ஆயிரத்து, 770 கிரெட்டா கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்தியாவில் உருவாக்கப்பட்ட, கிரெட்டா கார், ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வெற்றியை உலகுக்கு பறைசாற்றுவதாக உள்ளது,’’ என, அந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவு மூத்த துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
கிரெட்டா வாகனம் அறிமுகம் ஆனது முதல், இந்தியாவில் ஹுண்டாய் நிறுவன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், ஆகஸ்ட் முதல், அக்டோபர் வரை விற்பனை சக்கைபோடு போட்டிருக்கிறது. எனினும், அக்டோபரில் மட்டும், மகிந்திரா நிறுவனத்தின், ‘பொலிரோ’ வாகன விற்பனை எண்ணிக்கை, கிரெட்டா கார் விற்பனையை விட சற்று அதிகமாக இருந்தது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|