பதிவு செய்த நாள்
27 நவ2015
15:17

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள, டி.ஐ.சி.வி., என்ற, ‘டெய்ம்லர் இந்தியா’ வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனம், ‘பாரத் பென்ஸ்’ என்ற பெயரில் பல வர்த்தக வாகனங்களை தயாரித்து வருகிறது. 2012ல் இங்கு துவங்கப்பட்ட பாரத் பென்ஸ் டிரக் உற்பத்தி, நல்ல வரவேற்பு காரணமாக, தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. 30 ஆயிரம் டிரக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, டி.ஐ.சி.வி., தலைமை நிர்வாக அலுவலர் சோமிந்தர் சிங் கூறும்போது, ‘‘பாரத் பென்ஸ் டிரக், அனைத்து வித நிலப் பகுதிகளுக்கும் ஏற்றது. கட்டுமானம் மற்றும் சுரங்க தொழில் தொடர்புடைய வாகனங்களை தயாரித்து வருகிறோம். இதை பறைசாற்றும் விதமாக, பெங்களூரில் நடந்த தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய, ‘எக்ஸ்கான்’ கண்காட்சியில், பாரத் பென்ஸ் டிரக் உள்ளிட்ட பல தயாரிப்புகளை காட்சிப்படுத்தி இருந்தோம்,’’ என, கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|