பதிவு செய்த நாள்
27 நவ2015
15:18

ஹோண்டா நிறுவனம், ‘சிபிஆர் 150 ஆர்’ மற்றும் ‘சிபிஆர் 250 ஆர்’ பைக்குகளில் சில அம்சங்களை சேர்த்து மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
சிபிஆர் 250 ஆர் பைக், ஏ.பி.எஸ்., எனப்படும், ‘ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ மற்றும், ‘ஸ்டாண்டர்ட்’ ஆகிய, இரு பிரிவுகளில் களம் இறங்கியுள்ளது. சில ஸ்டிக்கர்களும் புதிதாக இடம் பெற்றுள்ளன. இதுதவிர, சிவப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய புதிய வண்ணங்களில் பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த, 249 சிசி சிங்கிள் சிலிண்டர், நான்கு ஸ்டிரோக் இன்ஜின், இதிலும் இடம் பெற்றுள்ளது. டில்லியில் இதன் ஷோரூம் விலை, 1.60 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
ஹோண்டா சிபிஆர் 150 ஆர் பைக்கில் அதே, 149.4 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எனினும், பச்சை, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய, மூன்று புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதன் ஷோரூம் விலை, 1.23 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|