பதிவு செய்த நாள்
02 டிச2015
15:37
மாருதி சுசூகி நிறுவனத்தின், ‘செலிரியோ’ காரில், கூடுதலாக சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், ஏ.பி.எஸ்., என்ற, ‘ஆன்டி -லாக் பிரேக்கிங்’ வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் திடீரென பிரேக் பிடிக்கும் போதும், வாகனத்துக்கு சீரான, ‘பேலன்ஸ்’ கிடைக்கும். இது தவிர, விபத்து நிகழும்போது, முன்புறத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்கு காயம் ஏற்படாதபடி, டேஷ்போர்டில் இருந்து வெளியே வரக்கூடிய, ‘ஏர் பேக்’ வசதி, முன்புறத்தில் உள்ள, இரு இருக்கைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவை இரு புதிய அம்சங்களும் அனைத்து செலிரியோ கார்களில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. புதிய மாறுதல்களுக்கு பின், செலிரியோவின், பெட்ரோல் ரக அடிப்படை மாடல் காரின் ஷோரூம் ஆரம்ப விலை, 4.16 லட்சம் ரூபாய்; டீசல் அடிப்படை மாடல் விலை, 4.91 லட்சம் ரூபாயாக இருக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|