பதிவு செய்த நாள்
10 டிச2015
14:46

பழநி: தொடர் மழையால் வரத்து குறைந்து கத்தரிக்காயை பின்னுக்குதள்ளி பச்சை மிளகாய் விலை, கிலோவுக்கு ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழநி சுற்றுப்புற கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி, கத்தரி, அவரை, முருங்கை, பச்சை மிளகாய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சில நாட்களாக மழைபெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்களுக்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக கத்தரிக்காய் அழுகி ஒரு மாதமாக ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது மழைக்கு மிளகாய்செடிகள் அழுகிவருவதால் வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதனால் கடந்தவாரம் ஒரு கிலோ ரூ.35 விற்ற பச்சை மிளகாய் தற்போது ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. மளிகை கடைகளில் சில்லரை விலைக்கு கிலோ ரூ.90 வரைவிற்கின்றனர்.நேற்றைய பழநி உழவர் சந்தை நிலவரம்(ஒருகிலோ) தக்காளி ரூ.40, அவரை ரூ.30, ப.மிளகாய் 60, சி.வெங்காயம் ரூ.50, பெல்லாரி ரூ. 40, முருங்கை ரூ. 120, கத்தரி- ரூ.70, வெண்டை-ரூ.24, உருளை ரூ.32, பீர்க்கங்காய் ரூ.30க்கு விற்பனையானது.
உழவர்சந்தை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ மழையால் காய்கறிகளின் வரத்து குறைந்து கொண்டேவருகிறது. குறிப்பாக சில நாட்களாக கத்தரிக்காய் விலை கூடுதலாக உள்ளது. அதைவிட வரத்துகுறைந்து, பச்சைமிளகாய் கடந்தவாரத்தை விட இருமடங்கு உயர்ந்து ஒருகிலோ ரூ.80 விற்கிறது. மேலும் சென்னை, கடலுார் மாவட்டங்களில் விலை பலமடங்கு கூடுதலாக கிடைப்பதால் வியாபாரிகள் காய்கறிகளை மொத்தமாக வாங்கி அப்பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் காய்கறிவிலை உயர்ந்துள்ளது,” என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|