பதிவு செய்த நாள்
10 டிச2015
14:47

மும்பை: தமிழகத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 10 ஆயிரம் பேர் இழப்பீடு கோரியுள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ.2,500 கோடி என இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்திலிருந்து அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் இழப்பீடு கேட்டு 10 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.2,500 கோடி வரை இருக்கும். அனைத்து நிறுவனங்களும் இதனை எதிர்கொண்டு இழப்பீடு வழங்க தயாராகி வருகின்றன. இதற்காக சென்னையில் 12 மையங்கள் அமைக்க உள்ளன. இதன் மூலம் விரைவாக இழப்பீடு வழங்க முடியும்.
நியூ இந்தியா நிறுவனம் 1,300 மனுக்கள் பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.400 கோடி ஆகும். இந்த நிறுவனம் ஏற்கனவே 25 புகார்களுக்கு ரூ.2 கோடிவரைஇழப்பீடு வழங்கியுள்ளது. மக்களுக்கு உதவ இலவச அழைப்பு எண்களும், உதவி எண்களும், கால் சென்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் ஹூத்ஹூத் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இழப்பீடு வழங்கயது போல் தற்போதும், விரைவாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
புனைடைட் இந்தியா நிறுவனத்திற்கு இழப்பீடு கேட்டு 1,852 மனுக்கள் வந்துள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ.657 கோடி எனவும், இதுவரை 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், சென்னையில் 8 மையங்களும், புதுச்சேரியில் ஒரு மையமும் திறக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து இழப்பீடு கேட்கப்படுகிறது என கூறினார்.
ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு கேட்டு 600 மனுக்கள் வந்துள்ளன எனவும், இதன் மதிப்பு ரூ.150 கோடி எனவும் அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர்இழப்பீடு வழங்கும் பணி வரும் திங்களன்று தொடரும். சில மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் கூறினார்.இந்த நிறுவனம் சார்பில் சென்னையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.டாடா ஏ.ஐ.ஜி., நிறுவனம் இழப்பீடு கேட்டு 382 மனுக்கள் வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|