பதிவு செய்த நாள்
29 டிச2015
18:19

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் நாள்முழுக்க உயர்வுடனேயே முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45.35 புள்ளிகள் உயர்ந்து 26,079.48-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 3.80 புள்ளிகள் உயர்ந்து 7,928.95-ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 11 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|