பதிவு செய்த நாள்
05 ஜன2016
18:26

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவுடன் முடிந்தன. சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் நேற்று ஆட்டம் கண்டன. அதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் நேற்று கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 537 புள்ளிகளும், நிப்டி 170 புள்ளிகளும் சரிந்தன.
இந்தச்சூழலில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. ஆனால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால், பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின. இறுதியில் வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் குறியீட்டு எண் 43.01 புள்ளிகள் சரிந்து 25,580.34-ஆகவும், நிப்டி 6.65 புள்ளிகள் சரிந்து 7,784.65-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி தொடர்பான பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 1.95 சதவீதம் சரிவை சந்தித்தது. இதை தொடர்ந்து பேங் ஆப் பரோடா 1.92 சதவீதமும், எஸ்பிஐ., 1.34 சதவீதமும் சரிந்தன. வங்கிகள் பங்குகள் தவிர்த்து ஐடி நிறுவன பங்குகளான இன்போசிஸ், டிசிஎஸ்., நிறுவன பங்குகள் 0.55 சதவீதமும், 0.83 சதவீதமும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|