பதிவு செய்த நாள்
18 ஜன2016
10:14

மும்பை : கடந்த வாரத்தில் ஏற்றபட்ட கடுமையான இழப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் சரிவு நிலையே தொடர்கிறது. டிசிஎஸ், ஹச்டிஎப்சி வங்கி, சிஐஎல், ஓஎன்ஜிசி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் மற்றும் ஐடி துறை நிறுவன பங்குகள் கடந்த வாரம் பெரிய அளவில் சரிவை கண்டன. இதனால் கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் ரூ.48,762.5 கோடி சரிவை சந்தித்தது.
முக்கிய நிறுவனங்களின் காலாண்டு நிகர லாபம் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என்பதால், பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விப்ரோ நிறுவனம் இன்று காலை வெளியிட்ட காலாண்டு நிகர லாபம், கடந்த காலாண்டை விட சரிவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடனேயே துவங்கின. வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 16.96 புள்ளிகள் சரிந்து 24438.08 புள்ளிகளாகவும், நிப்டி 12.50 புள்ளிகள் சரிந்து 7425.30 புள்ளிகளாகவும் இருந்தன.
பங்குச் சந்தையில் இன்று மொத்தம் 417 பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. 61 பங்குகளில் எவ்வித மாற்றமும் இன்றி காணப்படுகின்றன. இந்திய பங்குச்சந்தைகளின் சரிவிற்கு சர்வதேச சந்தைகளின் சரிவும் காரணம் என கூறப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியாகவே இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுடன் துவங்கி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|