பதிவு செய்த நாள்
23 ஜன2016
12:49

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் தினமும், 15 லட்சம் முட்டைகள் உற்பத்தி குறைந்துள்ளதால், முட்டைக்கு, 10 காசு மட்டும் குறைத்து விற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நாமக்கல் மண்டல தலைவர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: கடும் பனிப்பொழிவால், முட்டையின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து, அதன் விலை உயர்ந்து வருகிறது. சபரிமலை தரிசனம், தைப்பூசம் முடிக்கு வருவதால், தமிழகத்திலும் முட்டை தேவை அதிகரித்து, விலை உயர வாய்ப்புள்ளது.
கடந்த ஓராண்டாக, முட்டைக்கோழி பண்ணை தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், நாமக்கல் மண்டலத்தில் தினமும், 15 லட்சம் முட்டைகள் உற்பத்தி குறைந்துள்ளது. பண்ணையாளர்கள் ஏற்றுமதி அளவு முட்டைகளை, பெரிய முட்டை விலையில் இருந்து, 10 காசு மட்டுமே குறைத்து விற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|