பதிவு செய்த நாள்
30 ஜன2016
17:14
வாஷிங்டன்: சமூக வலைதளமான, 'பேஸ்புக்' நிறுவனத்தின் பங்கு மதிப்பு, ஒரே நாளில், 13 சதவீதம் உயர்ந்ததால், அதன் நிறுவனரான மார்க் ஸுக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு, 40 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்து, 3.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இதன் மூலம், உலக பணக்காரர்கள் பட்டியலில், மார்க் ஸுக்கர்பர்க், ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் விற்பனை, சென்ற டிசம்பருடன் முடிந்த நான்காவது காலாண்டில், 52 சதவீதம் உயர்ந்து, நிகர வருவாய், இரு மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த தகவல் வெளியானதை அடுத்து, அமெரிக்காவின், 'நாஸ்டாக்' பங்குச் சந்தையில், பேஸ்புக் நிறுவனப் பங்கின் விலை, ஒரே நாளில், 13 சதவீதம் உயர்ந்தது.
உலக கோடிஸ்வரர்கள்...
பில்கேட்ஸ் 5.21 லட்சம் கோடி ரூபாய்
அமான்சியோ ஆர்டெகா 4.70 லட்சம் கோடி ரூபாய்
வாரன் பப்பெட் 3.95 லட்சம் கோடி ரூபாய்
ஜெப் பெசோஸ் 3.47 லட்சம் கோடி ரூபாய்
கார்லஸ் ஸ்லிம் 3.20 லட்சம் கோடி ரூபாய்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|