பதிவு செய்த நாள்
16 பிப்2016
14:51

புதுடில்லி,:இந்தியாவில், தகவல் தொழில்நுட்பம் எனப்படும், ஐ.டி., துறையில், அதிகபட்சமாக, மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது; குறைந்தபட்சமாக, உற்பத்தி துறையில், சராசரியாக, மணிக்கு, 254 ரூபாய் வழங்கப்படுகிறது.
எம்.எஸ்.ஐ., எனப்படும், மான்ஸ்டர் ஊதியக்குறியீடு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை விவரம்: ஐ.டி., துறையில் சராசரியாக, மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள பி.எப்.எஸ்.ஐ., எனப்படும், வங்கி, நிதி மற்றும் இன்சூரன்ஸ் துறையில், சராசரியாக, மணிக்கு, 300 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. நாட்டில் அதிகபட்ச சம்பளம் கிடைத்தாலும், இந்த இரு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், 'சம்பளம் போதவில்லை' என, வருத்தப்படுகின்றனர்.
நாட்டிலேயே மிகக்குறைவாக, உற்பத்தித் துறை ஊழியர்களுக்கு, சராசரியாக, மணிக்கு, 254 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது. முதுகலைப் பட்டம் பெற்றவருக்கு கூட, உற்பத்தித் துறையில், அதிகபட்சம், மணிக்கு, 260 ரூபாய் சம்பளமே தரப்படுகிறது.வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை விட, இரு மடங்கு சம்பளம் தருகின்றன. வங்கி, நிதி, இன்சூரன்ஸ் துறையில், சிறு நிறுவனங்கள், மணிக்கு, 197 ரூபாயும், பெரிய நிறுவனங்கள், மணிக்கு, 324 ரூபாய் ஊதியம் அளிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|