'ஷாக்' அடிக்கும் 'அடாப்டர்:' திரும்ப பெறுகிறது ஆப்பிள்'ஷாக்' அடிக்கும் 'அடாப்டர்:' திரும்ப பெறுகிறது ஆப்பிள் ... வளையும் 'ஸ்மார்ட்போன்': விஞ்ஞானிகள் சாதனை வளையும் 'ஸ்மார்ட்போன்': விஞ்ஞானிகள் சாதனை ...
ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் மவுசு; நொடிக்கு 6லட்சம் பேர் முன்பதிவு - முடங்கியது இணையதளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2016
14:02

கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில், உலகிலேயே மிகவும் மலிவான விலையில், 'ஸ்மார்ட் போன்' இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன், 251 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இந்த மலிவு விலை போன்க்கு புக்கிங் இன்று(பிப்.,18ம் தேதி) காலை 6 மணிக்கு துவங்கியது. துவங்கிய சில மணிநேரங்களிலேயே அந்த இணையதளம் முடங்கும் அளவுக்கு நொடிக்கு 6 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். இதனால் தற்காலிகமாக முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சர்வர் ஓவர் லோடு ஆகியுள்ளதாகவும், இ‌து சரியாக குறைந்தது 24மணிநேரம் ஆகும் என அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.சி.ஆர்., எனப்படும், தேசிய தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த நொய்டாவில், 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம், உலகின் மிக மலிவான ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளது. 'பிரீடம் 251' எனப் பெயரிடப்பட்ட, இந்த போன், 251 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.டில்லியில், நேற்று மாலை நடந்த விழாவில், பிரீடம் 251 ஸ்மார்ட் போன், அறிமுகப்படுத்தப்பட்டது.
பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரீடம் 251 ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு, 18ம் தேதி, காலை, 6:00 மணிக்கு துவங்கி, 20ம் தேதி இரவு, 8:00 மணிக்கு முடிவடையும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின், www.freedom251.com என்ற, இணையதளத்தில், இந்த போனை பெற முன்பதிவு செய்யலாம்.
இத்தனை வசதிகளா? : பிரீடம் 251 போனில், இடம்பெற்றுள்ள வசதிகள் குறித்து, ரிங்கிங் பெல்ஸ் நிறுவன இணையதளத்தில் கூறியிருப்பதாவது:
* 5,000 ரூபாய் மதிப்புள்ள போன்களுக்கு உள்ளது போன்ற, 4 அங்குல தொடுதிரை* 'டுவிட்டர், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் வேகமாக இயங்கக் கூடிய வகையிலான, 1 'ஜிபி' நினைவுத்திறன்* 8 ஜிபி தகவல் சேமிப்பு திறன்* 3.2 'மெகாபிக்சல்' பின்புற கேமரா* 0.3 மெகாபிக்சல் முன்புற அல்லது, 'செல்பி'கேமரா* ஒரு நாள் முழுவதும் தாங்கக் கூடிய, 1,450 எம்.ஏ.எச்., திறனுள்ள, 'பேட்டரி'* 1.3 கிகாஹெர்ட்ஸ் குவாட் - கோர் பிராசசர்* 32 ஜி.பி., மைக்ரோ எஸ்.டி., கார்டு பொருத்த முடியும்* ஒரு ஆண்டு வாரண்டியும் உண்டு* நாட்டின் பல பகுதிகளில், 500க்கும் அதிகமான சர்வீஸ் சென்டர்கள் அமைக்கப்படுகின்றன.
சாமானியனின் கனவு நனவாகியது : மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், முழுமையாக உள்நாட்டிலேயே, இந்த மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, இந்திய மொபைல் போன் சந்தையில், ஸ்மார்ட் போன்களின் குறைந்தபட்ச விலை, 1,500 ரூபாய்; அதிகபட்சம், இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பிரீடம் 251 ஸ்மார்ட் போன், 251 ரூபாய்க்கு விற்கப்படுவதால், சாதாரண மனிதனின் ஸ்மார்ட் போன் கனவு, நனவாகியுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, 'இன்போசிஸ்' நடப்பு நிதியாண்டின் ... மேலும்
business news
புதுடில்லி:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மீது, மீண்டும் ஒரு குற்றச்சாட்டு ... மேலும்
business news
புது­டில்லி:கடந்த செப்­டம்­பர் மாதத்­து­டன் முடி­வ­டைந்த இரண்­டா­வது காலாண்­டில், ‘விப்ரோ’ நிறு­வ­னத்­தின் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின், இரண்டாவது மிகப் பெரிய, தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிகர ... மேலும்
business news
மும்பை:நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்துட்ப சேவை நிறுவனமான, டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)