பதிவு செய்த நாள்
19 பிப்2016
05:00

புதுடில்லி : ‘இந்தியாவில், ஆடம்பர வாகனம்,
ஆடை, அணிகலன்கள் உள்ளிட்டவற்றின் சந்தை மதிப்பு வரும், 2017ல், 1,400 கோடி
டாலரில் இருந்து, 1,800 கோடி டாலராக உயரும்’ என, ‘அசோசெம்’ மதிப்பிட்டுள்ளது.வளரும்
நாடுகளைப் பொறுத்தவரை, அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆடம்பர சந்தை, 50 சதவீதத்திற்கும்
அதிகமாக வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வறிக்கை : இவ்வளர்ச்சிக்கு, பிரேசில், ரஷ்யா, இந்தியா,
சீனா ஆகியவற்றை உள்ளடக்கிய, ‘பிரிக்’ நாடுகள், குறிப்பிடத்தக்க பங்களிப்பை
வழங்கும் என, அசோசெம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய
மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால் ஆடம்பர கார், மோட்டார் சைக்கிள், ஆடை,
‘வாட்ச்’ உள்ளிட்ட பொருட்களை வாங்குவோர், 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.
சூடுபிடிக்கும் : ஆடம்பர பொருட்களை வாங்குவதில்,
10 சீனர்களுக்கு, ஒரு இந்தியர் என்ற அளவிற்கே, நம் பங்களிப்பு உள்ளது.
அவற்றில் ஒன்றான, ‘சிங்கிள் பிராண்டு’ சில்லரை விற்பனையில் மட்டும், மத்திய
அரசு கவனம் செலுத்தி, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது.
சர்வதேச ஆடம்பர சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு, 1 – 2 சதவீதம் என்ற
அளவிற்கு தான் உள்ளது. இருந்தபோதிலும், ‘வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார
வளர்ச்சி சூடுபிடிக்கும்’ என்பதால், ஆடம்பர சந்தைக்கும் பிரகாசமான
வளர்ச்சி வாய்ப்பு உள்ளதாக, மதிப்பிடப்பட்டு உள்ளது.இதை கருத்தில் கொண்டு,
20க்கும் மேற்பட்ட, சர்வதேச நிறுவனங்கள், இந்திய ஆடம்பர சந்தையில் கால்
பதிக்க தயாராக உள்ளன.
டில்லிக்கு முதலிடம் : இந்தியாவில், ஆடம்பர பொருட்கள்
சந்தையில், டில்லி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், மும்பை, பெங்களூரு,
சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், புனே ஆகிய நகரங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|