பதிவு செய்த நாள்
19 பிப்2016
18:11

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்தவாரம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்த நிலையில் இந்தவாரம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டன.
முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்யததால் இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சரிவுடன் துவங்கின. ஆனால் இந்த சரிவு வர்த்தகம் முடியும் போது இல்லை. ஏற்றத்துடன் முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதன் விளைவாக பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 59.93 புள்ளிகள் உயர்ந்து 23,709.15-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 19 புள்ளிகள் உயர்ந்து 7,210.75-ஆகவும் முடிந்தன. இந்தவாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 723 புள்ளிகளும், நிப்டி 229 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. இதன்மூலம் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு ஒருவாரத்தில் அதிக ஏற்றம் கண்டது இப்போது தான்.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 18 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 12 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|