பதிவு செய்த நாள்
22 பிப்2016
07:17
புதுடில்லி : எல்.ஜி., இந்தியா நிறுவனம், ‘ஏசி, டிவி, மொபைல்போன்’ உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின், சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் நீலாத்ரி தத்தா கூறியதாவது:இந்த ஆண்டு, குடிநீர் சுத்திகரிப்பு சாதனம், காற்றை துாய்மைப்படுத்தும் சாதனம் என, இரு புதிய பிரிவுகளில் தீவிரமாக களமிறங்க உள்ளோம்.கடந்த, 2015ல், சந்தை நிலவரம் சரியில்லாததால், நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி, எதிர்பார்த்ததை விட குறைவாக, அதாவது, 10 சதவீத அளவிற்கே இருந்தது. இந்த ஆண்டைப் பொறுத்தவரை, ஜனவரியில் விற்பனை நன்கு இருந்தது. இதே நிலை தொடருமா என இப்போதே கூற முடியாது.இருந்த போதிலும், இந்த ஆண்டு, 30 சதவீத வருவாய் வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|