பதிவு செய்த நாள்
22 பிப்2016
07:20
பெங்களூரு : ஹேவல்ஸ் இந்தியா நிறுவனம், பெங்களூரில், 50 ஏக்கரில், புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் அனில் குப்தா கூறியதாவது:ஹேவல்ஸ் நிறுவனம், விளக்கு, கேபிள், சுவிட்ச், மோட்டார் உட்பட, பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறது. வட இந்தியாவின் ஏழு இடங்களில், 11 தொழிற்சாலைகள் உள்ளன. முதன் முதலாக, தென்னிந்தியாவில், பெங்களூரில், 1,050 கோடி ரூபாய் முதலீட்டில், 12வது தொழிற்சாலையை அமைக்க உள்ளோம். இதன் மூலம், 2,576 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இணையம் மூலம் இயக்கும், ‘ஸ்மார்ட்’ மின்விளக்குகள் மற்றும் மின் சாதனங்களை தயாரித்து வருகிறோம். அதனால், ‘சாப்ட்வேர்’ வல்லுனர்கள் அதிகம் உள்ள பெங்களூரில், தொழிற்சாலையை அமைக்கிறோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|