தினமும் 2 கோடி பேர்: ‘ஸ்நாப்டீல்’ இலக்குதினமும் 2 கோடி பேர்: ‘ஸ்நாப்டீல்’ இலக்கு ... மேல்படிப்பில் ஆர்வம் காட்டும் ஊழியர்கள் மேல்படிப்பில் ஆர்வம் காட்டும் ஊழியர்கள் ...
‘ஸ்டார்ட் அப் இந்­தியா’ கல்வித் திட்டம் போதாது...! கண் திறக்கும் ஆய்­வ­றிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
07:30

புது­டில்லி : ‘மத்­திய அரசின் ஸ்டார்ட் அப் இந்­தியா திட்­டத்தின் கீழ், அடுத்த ஓராண்டில், 130 நிறு­வ­னங்கள் உரு­வாகும்; அதன் மூலம், 5,000 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்கும்’ என, ‘இன்­னோவென் கேபிடல்’ நிறு­வ­னத்தின், ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்:இந்த ஆண்டு, ஸ்டார்ட் அப் துறையில், 1,400 கோடி ரூபாய் முத­லீட்டில், 130 நிறு­வ­னங்கள் உரு­வாகும். அதில், நுகர்வோர் தேவை­க­ளுக்­கான வலை­த­ளங்கள், ‘இ – காமர்ஸ்’ எனப்­படும், மின்­னணு வணிக நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்றின் பங்­க­ளிப்பு, பெரும்­பான்­மை­யாக இருக்கும். ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் முதல் தேர்­வாக டில்லி உள்­ளது. அடுத்து, பெங்­க­ளூரு, மும்பை ஆகிய நக­ரங்கள் உள்­ளன.
நடப்பு 2015–16ம் நிதி­யாண்டில், தனிநபர்கள் உரு­வாக்­கிய, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில், 50 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மா­னவை, லாபப் பாதைக்கு திரும்பும். அது­போல, நிதி நிறு­வ­னங்­களின் ஆத­ர­வுடன் துவக்­கப்­பட்­ட­வற்றில், 45 சத­வீ­தத்­திற்கும் மேலா­னவை லாபம் காணும். இது, புது­மை­யான திட்­டங்­களில் இறங்­கிய நிறு­வ­னங்­களை பொருத்­த­வரை, 22 சத­வீ­த­மாக இருக்கும். இந்த மூன்று பிரி­வு­க­ளிலும், பெண் நிறு­வ­னர்கள் அல்­லது பெண் தலைமை செயல் அதி­கா­ரி­களின் பங்­க­ளிப்பு, முறையே, 31, 29 மற்றும் 41 சத­வீதம் என்ற அளவில் உள்­ளன. பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்கள் புதி­தாக ஆட்­களை தேர்வு செய்யும்; அதில், 28 சத­வீதம் பேர், தொழில்­நுட்ப வல்­லு­னர்­க­ளாக இருப்பர்.
‘ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் எதிர்­கால தேவை­களை பூர்த்தி செய்யக் கூடிய அள­விற்கு, இந்­திய கல்வித் திட்டம் இல்லை’ என, ஆய்வில் பங்­கேற்­றோரில், 70 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மானோர் தெரி­வித்­துள்­ளனர்.‘முந்­தைய ஆண்டை விட கடந்த ஆண்டு, அர­சியல் மற்றும் வணிகச் சூழல் நன்கு உள்­ளது’ என, 65 சத­வீதம் பேரும், ‘இந்­தாண்டு, மேலும் முன்­னேற்றம் இருக்கும்’ என, 76 சத­வீ­தத்­தி­னரும், கருத்து தெரி­வித்­துள்­ளனர்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
அது என்ன ‘ஸ்டார்ட் அப்?’குறைந்த முத­லீட்டில், தொடர்ந்து சந்தை வாய்ப்பை வழங்கக் கூடிய புது­மை­யான தொழில்­களை மேற்­கொள்ளும் நிறு­வ­னங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் என, அழைக்­கப்­ப­டு­கின்­றன. இவற்றில் பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்கள் வலை­தள வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டு உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)