பதிவு செய்த நாள்
22 பிப்2016
09:57

ரிச் ஹாபிட்ஸ்
ஆசிரியர்: தாமஸ் கார்லி
செல்வ செழிப்பு மிக்கவர்களுக்கும், ஏழைகளாக இருப்பவர்களுக்கும் இடையே பழக்க வழக்கங்களில் முக்கிய வேறுபாடு இருக்கிறது என்கிறார் தாமஸ் கார்லி. இவற்றை, பணக்கார பழக்கங்கள் மற்றும் ஏழை பழக்கங்கள் என வகைப்படுத்துபவர், எல்லோரிடமும் இந்த இரு வகை பழக்கங்களுமே இருக்கும் என்கிறார். பணக்கார பழக்கங்கள் அதிகம் இருப்பது தான் முக்கியம் என்பவர், ‘ரிச் ஹாபிட்ஸ்; தி டெய்லி சக்சஸ் ஹாபிட்ஸ் ஆப் வெல்தி இண்டுவிஜுவல்ஸ்’ புத்தகத்தில் இவற்றை விவரித்திருக்கிறார்.
செல்வந்தர்கள் மற்றும் சாதாரண நிலையில் இருக்கும் மனிதர்களிடம் ஐந்து ஆண்டுக்கு மேல் செய்யப்பட்ட ஆய்வின் பயனாக செல்வந்தராக்கும் பழக்கங்களை அவர் முன்வைக்கிறார்;
* செல்வந்தர்கள் தினமும் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துகின்றனர். செல்வந்தர்கள் மாதாந்திர மற்றும் ஆண்டு இலக்குகளை வைத்திருப்பதுடன் அவற்றை ஈடுபாட்டுடன் எழுதியும் வைக்கின்றனர். இலக்கு என்பது வெறும் விருப்பம் அல்ல என அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். இலக்குகள் அடையக்கூடியது என்பதோடு, அவற்றுக்கான செயல்களையும் மேற்கொள்ளக்கூடியது
* செல்வந்தர்கள் செய்து முடிக்க வேண்டிய செயல்களின் பட்டியலை வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர்
* செல்வந்தர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுகின்றனர். அவர்கள், ‘டிவி’ பார்த்து நேரத்தை வீணடிப்பதை தவிர்க்கின்றனர். அதற்கு பதிலாக புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிக்கின்றனர்
இதன் காரணமாகவே அவர்களால், ‘டிவி’ பார்க்காமல் இருக்க முடிகிறது. பெரும்பாலும் தங்கள் பயணநேரங்களையும் பயனுள்ளதாக ஆக்கி கொள்கின்றனர். காரில் செல்லும் போது ஒலி புத்தகங்களை கேட்கின்றனர்
* அவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் பொழுதுபோக்கு ரகத்தை சேர்ந்ததாக இல்லாமல் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் வகையை சேர்ந்தவையாக இருக்கின்றன.
சுயமுன்னேற்ற நூல்கள், வெற்றிகரமான மனிதர்கள் பற்றிய புத்தகங்கள் மற்றும் சுயசரிதைகளை விரும்பி படிக்கின்றனர். தங்களுக்கான வழிகாட்டிகளையும் பெற்றிருக்கின்றனர்
* பணி நேரத்துடன் அவர்கள் நின்று விடுவதில்லை. எப்போதும் கூடுதலாக உழைக்கின்றனர். ஆனால், வேலையால் ஒருபோதும் அதிருப்தி கொள்வதில்லை
* அவர்கள் லாட்டரியில் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. மாறாக தங்கள் பணத்தை கொண்டு துணிந்து முயற்சி மேற்கொள்கின்றனர். அதோடு உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துகின்றனர்
* நட்பு மற்றும் உறவுகளை முக்கியமாக கருதுபவர்களாக செல்வந்தர்கள் இருக்கின்றனர். நண்பர்களின் பிறந்த தினம் போன்வற்றின் போது அவர்களை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.
தொடர்புகள் முக்கியமானவை என்று நினைத்து செயல்படுவது அவர்கள் தங்களுக்கான வலைப்பின்னலை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. மேலும், அவர்கள் புதியவர்களை சந்திப்பதிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேல் அவர்கள் எப்போதும் புன்னகையை தக்க வைத்துக்கொள்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|