பதிவு செய்த நாள்
22 பிப்2016
17:56

மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்ததுடன், தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்துடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாகவும், நாட்டில் உள்ள முக்கிய நிறுவன பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை சரிவிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாலும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 79.64 புள்ளிகள் உயர்ந்து 23,788.79-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 23.80 புள்ளிகள் உயர்ந்து 7,234.55-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|