பதிவு செய்த நாள்
24 பிப்2016
00:42
மும்பை : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், ‘சிகா’ காரின் பெயர், ‘டியாகோ’ என, மாறியுள்ளது. இந்நிறுவனம், சமீபத்தில் டில்லியில் நடந்த ஆட்டோ மொபைல் கண்காட்சியில், ‘சிகா’ என்ற ‘ஹாட்ச்பேக்’ வகை காரை அறிமுகம் செய்தது. அப்போது, தென் அமெரிக்க நாடுகளில், ‘சிகா’ என்ற உயிர்கொல்லி நோய் வேகமாக பரவியது. இதனால், ‘சிகா’ காரின் பெயரை மாற்றப்போவதாக, டாடா மோட்டார்ஸ் அறிவித்தது. அதன்படி, தற்போது, அந்த காரின் பெயரை, ‘டியாகோ’ என மாற்றியுள்ளது. இந்த காரின் விளம்பர துாதராக, பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெசி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த கார், மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது. டாடாவின்,‘டியாகோ’ கார், மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்களின், நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களுடன் போட்டி போடும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|