பதிவு செய்த நாள்
26 பிப்2016
04:36

மும்பை : ‘ஸ்மார்ட் போன்’ விற்பனையில் ஈடுபட்டு வரும், ‘ஜியோனி’ நிறுவனம், அடுத்த ஆண்டில், 200 புதிய விற்பனை மையங்களை துவக்குவதன் மூலம், 17,500 பேருக்கு, வேலை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம், இந்தியாவில், ஐந்து கோடி டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்திற்கு, 30 சொந்த விற்பனை மையங்கள் உள்ளன.
இதுகுறித்து, ஜியோனி இந்திய நிறுவன தலைமை செயல் அதிகாரி அரவிந்த் வோரா கூறியதாவது: ஜியோனி நிறுவனம், மாதந்தோறும், சராசரியாக, மூன்று லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்கிறது. அடுத்த ஆண்டில், சொந்த விற்பனை மையங்களின் எண்ணிக்கையை, 250 ஆகவும், 350 சேவை மையங்கள் துவக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம், புதிதாக, 15 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|