பதிவு செய்த நாள்
26 பிப்2016
04:38

பெங்களுர் : இந்தியாவில், தகவல் தொழில்நுட்பத் துறையில், ‘இன்போசிஸ்’ நிறுவனம், இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், இன்போசிஸ் தள்ளாடிய போது, கை கொடுத்தவர் விஷால் சிகா. அவர், ‘சாப்’ நிறுவனத்தில் இருந்து விலகி, 2014, ஜூன், 12ல், இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அவர், தன் திறமையான அணுகுமுறையால், இன்போசிஸ் நிறுவனத்திற்கு புத்துயிரூட்டி, வளர்ச்சிக்கு வழி வகுத்தார். அதனால், அவரின் பணி ஒப்பந்த காலத்தை நீட்டித்து, சர்வதேச நிறுவனங்களுக்கு நிகரான ஊதியத்தை, இன்போசிஸ் வழங்க உள்ளது. தற்போது, ஊதியம் உள்ளிட்ட சலுகைகளுடன், ஆண்டுக்கு, 49 கோடி ரூபாய் பெறும், சிகா, 2017ல், 70 கோடி ரூபாய் பெறுவார். அவரின் பங்கு ஊக்கத் தொகை மட்டும், மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|