பதிவு செய்த நாள்
26 பிப்2016
04:40

மிசௌரி : அமெரிக்காவில், ‘பேபி பவுடர்’ பயன்படுத்திய தால், கருப்பை புற்றுநோய் ஏற்பட்டு பெண் உயிரிழந்ததாக புகார் கூறப்படும் நிலையில், அவரது குடும்பத்திற்கு, 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
‘முகப்பவுடர்’ உட்பட குழந்தைகளுக்கான உடல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம், ஜான்சன் அண்ட் ஜான்சன். இந்நிறுவனத்தின், ‘பேபி பவுடர்’ உள்ளிட்ட தயாரிப்புகளில் கலந்துள்ள சில ரசாயனங்களால், புற்றுநோய் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது, இது தொடர்பாக, மிசௌரி, நியூர்ஜெர்சி உள்ளிட்ட கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், அங்கு, ஜாக்கி பாக்ஸ் என்ற, 62 வயது பெண்மணி, கடந்த ஆண்டு, கருப்பை புற்றுநோயால் உயிரிழந்தார். ஜான்சன் அண்ட் ஜான்சன், ‘பேபி பவுடரை’ நீண்டகாலமாக அவர் பயன்படுத்தி வந்ததால், புற்றுநோய் ஏற்பட்டதாக கூறி, மிசௌரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு கோர்ட் உத்தரவிட்டது.
ரசாயனங்கள் நீக்கம் :அழகு சாதனப்பொருட்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்களுக்கு எதிராக, அமெரிக்காவில், கடந்த, 2009ம் ஆண்டு பிரசாரங்கள் நடந்தன. இதையடுத்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், 2012ம் ஆண்டு, தன் தயாரிப்புகளில், பார்மால்டிஹைடு, உள்ளிட்ட சில ரசாயனங்களை நீக்க முன் வந்தது.
மேல்முறையீடு செய்ய முடிவு:இந்த வழக்கில், மேல்முறையீடு செய்யப்போவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது.‘முகப்பவுடருக்கும், புற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த புகார் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை’ என, அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|