பதிவு செய்த நாள்
26 பிப்2016
17:48

புதுடில்லி : நடப்பாண்டுக்கான பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், பிப்.29ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக பார்லிமென்ட்டில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது...
சர்வதேச அளவில் பொருளாதாரம் சரியாக இல்லையென்றாலும், இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருக்கிறது. கடந்தாண்டில் 2014-15ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது, நடப்பாண்டு இது 7.6 சதவீதமாக இருக்கும். 2016-17ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும். வேளாண் உற்பத்தி 33 சதவீதமாக இருக்கும். வேலை வாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கும், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். 7வது ஊதிய குழுவை அமல்படுத்தினாலும் பெரிய மாற்றம் இருக்காது.
பணவீக்கத்தை பொறுத்தமட்டில் 4.5 முதல் 5 சதவீதமாக இருக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.9 சதவீதமாக இருக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|