தங்கத்தின் விலை கிராம் ரூ.2,756தங்கத்தின் விலை கிராம் ரூ.2,756 ... சத்தமின்றி இயங்கும் ‘ஜெனரேட்டர்’ சென்னையில் ‘டாபே’ அறிமுகம் சத்தமின்றி இயங்கும் ‘ஜெனரேட்டர்’ சென்னையில் ‘டாபே’ அறிமுகம் ...
பொருளாதார ஆய்வறிக்கை தொழில் செய்ய என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2016
04:19

புதுடில்லி:மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2015 – 16ம் நிதியாண்டின், பொருளாதார ஆய்வறிக்கையை, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தார். சிறு சிறு தொழில்களில் இறங்குவோர், இந்த அறிக்கையை வைத்து, எந்த துறையைச் சார்ந்து தொழில் செய்யலாம் என்பதை ஓரளவு கணித்து கொள்ளலாம்.
உற்பத்தி துறையா; சேவை துறையா?இந்த பொருளாதார அறிக்கையின்படி பார்த்தால், உற்பத்தி துறையை விட, சேவை துறை தான் சிறப்பாக இருந்திருக்கிறது. கடந்த, 2001ல், 1,680 கோடி டாலராக இருந்த, சேவைகள் துறையின் ஏற்றுமதி, 2014ல், 15,560 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, எஸ்.இ.ஐ.எஸ்., மற்றும் ஜி.இ.எஸ்., என்ற இரு திட்டங்களை அறிமுகப்படுத்தி யுள்ளதால், ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.அதனால் முக்கியமான சேவை துறைகள் சிலவற்றின் நிலையை பார்க்கலாம்...
சுற்றுலா துறை
தற்போதைய நிலை* உள்நாட்டு சுற்றுலா துறை வளர்ச்சி கண்டிருக்கிறது* சுற்றுலா துறையை ஊக்குவிக்க, ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ மற்றும் ‘பிரசாத்’ என்ற இரு திட்டங்கள் அறிமுகம்* மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க, தனி வலைதளம் உருவாக்கம்.வாய்ப்புகள்* டிராவல்ஸ், தங்குமிடங்கள், உணவகங்கள்.
கப்பல் மற்றும் துறைமுகம்
தற்போதைய நிலை* பெரும்பான்மை வர்த்தகம், கடல் வழியே நடைபெறுகிறது* துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து, 8.28 சதவீதம் உயர்ந்து, 105 கோடி டன்னாக அதிகரித்துள்ளது= கடலோர சுற்றுலாவை மேம்படுத்த, 2019 – 20ல், உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து தடத்தை, 78ல் இருந்து, 108ஆக உயர்த்த திட்டம்.
வாய்ப்புகள்
சரக்கு வாகனங்கள், கன்டெய்னர், லாஜிஸ்டிக்ஸ்.
தகவல் தொழில்நுட்பம்
தற்போதைய நிலை* மின்னணு வணிகம், 21.48 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,700 கோடி டாலராக உயரும் * ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், 40 சதவீதம் அதிகரிப்பு * இதில், 85 ஆயிரம் வேலைவாய்ப்புகள்.
வாய்ப்புகள்
வேலை வாய்ப்பு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான அலுவலகங் கள், உணவகங்கள், டிராவல்ஸ்.
அஞ்சல் சேவைகள்
தற்போதைய நிலை
* வாடிக்கையாளர் எண்ணிக்கை, 33.97 கோடியாக அதிகரிப்பு* டிபாசிட், 6.53 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு* கணினி ஒருங்கிணைப்பு வசதி, 4,909 கோடி ரூபாய் செலவில் செய்யப்படுகிறது.
வாய்ப்புகள்* கணினி சார்ந்த குறிப்பாக ஹார்டுவேர், அக்சசரிஸ் போன்றவை. ஊடகம், பொழுதுபோக்கு
தற்போதைய நிலை
வேகமான வளர்ச்சி. வரும் ஆண்டுகளில், மேலும் வளர்ச்சி காணும். இதற்கு, டிஜிட்டல் விளம்பரம், வீடியோ கேம்ஸ் ஆகியவை முக்கிய பங்களிப்பை வழங்கும்.
வாய்ப்புகள்
விளம்பர நிறுவனங்கள், ஈவன்ட் மேனேஜ்மென்ட்.
ரியல் எஸ்டேட்
தற்போதைய நிலை
* ஆண்டுக்கு, சராசரியாக, 8.18 சதவீத வளர்ச்சி* சமீபமாக மந்த நிலை* வரும், 2022ம் ஆண்டிற்குள், ‘அனைவருக்கும் வீடு’ திட்டம் மூலம், ஆறு கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன.
வாய்ப்புகள்
கட்டுமான பொருட்கள் விற்பனை, வேலைவாய்ப்பு நிறுவனங்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)