பதிவு செய்த நாள்
27 பிப்2016
11:58
உலகின் பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனமான,‘ராயல் என்பீல்டு’ 500 சி.சி., பைக் வரிசையில், ‘ஸ்குவாட்ரன் புளூ’ என்ற நீல நிற புல்லட்டை அறிமுகம் செய்துள்ளது. நீலவானில் சீறிப் பாயும் இந்திய விமான படை விமானங்கள் மற்றும் அதன் வீரர்களை போற்றும் வகையில், நீல நிறத்திலான இந்த புல்லட்டை உருவாக்கி, சந்தைப்படுத்தியுள்ளது ராயல் என்பீல்டு.
இது குறித்து, ராயல் என்பீல்டு தலைவர் ருத்ரதேஜ் சிங் கூறியதாவது: கிளாசிக் ஸ்குவாட்ரன் 500 புளூ, ராயல் என்பீல்டு பைக்குகள் போர்க்களத்தில் வீரர்கள் முத்திரை பதித்ததை, நினைவுபடுத்துவதாக அமையும். இந்திய ராணுவத்துக்கு, 1952ல், 800 பைக்குகளை ராயல் என்பீல்ட் விற்பனை செய்தது. எனினும், இந்த புதிய ஸ்குவாட்ரன் புளூ, போர் யுகத்துக்கு பிந்தைய என்பீல்டு பைக்குகளின் பரிமாணத்தையும் விளக்குவதாக அமையும். இதன் விலை, 1 லட்சத்து 89 ஆயிரத்து 350 ரூபாய்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|