யுனிடெக் ரூ.38 கோடி கடன்; சென்ட்ரல் பாங்க் நட­வ­டிக்கையுனிடெக் ரூ.38 கோடி கடன்; சென்ட்ரல் பாங்க் நட­வ­டிக்கை ... ரூ.2,231 கோடி வேண்டும் மத்­திய அரசு மீது லுாப் டெலிகாம் வழக்கு ரூ.2,231 கோடி வேண்டும் மத்­திய அரசு மீது லுாப் டெலிகாம் வழக்கு ...
விஜய் மல்­லையா ஒப்­பந்­தத்தில் சந்­தேகம்; ‘செபி’ விசா­ரணை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2016
06:27

புது­டில்லி : ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ நிறு­வ­னத்தில் இருந்து, விஜய் மல்­லையா வெளி­யே­றி­யது தொடர்­பான ஒப்­பந்­தத்தில், விதி­மீறல் உள்­ள­தாக, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ சந்­தே­கித்து, விசா­ர­ணையை துவக்­கி­யுள்­ளது. பிரிட்­டனைச் சேர்ந்த மது­பான நிறு­வனம், டியா­ஜியோ. இந்­நி­று­வனம், விஜய் மல்­லையா தலை­மை­யி­லான, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறு­வ­னத்தின் பெரும்­பான்மை பங்­கு­களை வாங்­கி­யது.இதைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட கணக்கு தணிக்­கையில், விஜய் மல்­லையா நிதி­மு­றை­கே­டு­களில் ஈடு­பட்­டது தெரி­ய­வந்­தது. அதனால், அவரை தலைவர் பத­வியில் இருந்து வில­கு­மாறு, டியா­ஜியோ, ஓராண்­டாக வற்­பு­றுத்தி வந்­தது. இந்­நி­லையில், இரு தினங்­க­ளுக்கு முன், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறு­வ­னத்தின் அனைத்து பொறுப்­பு­களில் இருந்தும் வில­கு­வ­தாக, விஜய் மல்­லையா அறி­வித்தார். அதற்­காக அவ­ருக்கு, டியா­ஜியோ, 515 கோடி ரூபாய் வழங்க ஒப்புக் கொண்­ட­தா­கவும் தகவல் வெளி­யா­னது.விஜய் மல்­லையா மீது, பல்­வேறு புகார்­களை கூறிய நிலையில், திடீ­ரென அவற்றை கைவிட்­ட­துடன், பெருந்­தொ­கையை கொடுக்க, டியா­ஜியோ முன்­வந்­தது, பலத்த சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதனால், இந்த ஒப்­பந்­தத்தில், இந்­திய நிறு­வனச் சட்ட விதி­மீறல் உள்­ளதா என, ‘செபி’ விசா­ர­ணையை துவக்­கி­யுள்­ளது. அத்­துடன், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்கு விலையை செயற்­கை­யாக உயர்த்த, ‘தில்­லு­முல்லு’ நடந்­ததா என்­பது குறித்தும், செபி விசா­ரிக்க உள்­ளது. மேலும், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறு­வன நிதி­மு­றை­கே­டு­களில், முந்­தைய ‘ஆடிட்’ நிறு­வ­னங்­களின் பங்கு குறித்தும் விசா­ரணை மேற்­கொள்ள முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே, பங்­கு­களை பட்­டி­ய­லிட்­டது தொடர்­பான விதி­மீ­றல்கள் குறித்து, விஜய் மல்­லை­யாவின் யுனைடெட் புரு­வரீஸ் குழு­மத்தைச் சேர்ந்த நிறு­வ­னங்கள், செபியின் விசா­ரணை வளை­யத்தில் சிக்­கி­யுள்­ளன என்­பது, குறிப்­பி­டத்­தக்­கது. இத­னி­டையே, மத்­திய கார்ப்­பரேட் நிறு­வன விவ­கா­ரங்கள் அமைச்­ச­கமும், விஜய் மல்­லை­யாவின் ஒப்­பந்த பின்­னணி குறித்து விசா­ரிக்க உள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)