தங்கம் விலை ரூ.176 அதிகரிப்புதங்கம் விலை ரூ.176 அதிகரிப்பு ... எண்ணிப்பாருங்க.. எண்ணிப்பாருங்க.. ...
2016-17 பொது பட்ஜெட் ஒரு பார்வை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
15:18

புதுடில்லி: பார்லிமென்ட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடப்பாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இது இவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட்டாகும். இட்ஜெட் உரையில் அவர் பேசியதாவது...
சர்‌வதேச பொருளாதார நெருக்கடிக்கு இடையே இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. உலகப்பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்த போதும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது, பணவீக்கம் 5.6 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது, அந்நிய செலவாணி கையிருப்பு 350 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மோடி அவர்களின் அரசு, வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நலன், கிராமப்புற வளர்ச்சி மற்றும் இப்பகுதியில் வேலை வாய்ப்பு, சமூக நலத்திட்டம், கல்வி மற்றும் மேக் இந்தியா திட்டம் மூலம் திறன் வளர்ச்சி, அன்னிய முதலீடு பெருக்க திட்டம், நிதி துறையில் வெளிப்படையான தன்மை, வர்த்தக முன்னேற்ற திட்டம் ஆகிய 9 பிரிவுகளில் அரசு முழுக்கவனம் செலுத்தி நாட்டை முன்னேற்றத்திற்கு அழைத்து செல்ல பாடுபடும் என்றும் தெரிவித்தார்.
பட்ஜெட்டி முக்கிய அம்சங்கள்...
தனிநபர் விருமானம்* தனிநபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. * வருடத்திற்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் பெறுவோருக்கு ரூ3,000 வரிசலுகை.* வாடகை வீட்டில் வசிப்போருக்கான வரிச்சலுகை ரூ.24,000-யிலிருந்து ரூ.60 ஆயிரமாக அதிகரிப்பு* முதல் முறையாக ரூ 50 லட்சத்திற்குள், வீடு வாங்குவோருக்கு ரூ.50 ஆயிரம் கூடுதலாக வரிக்கழிவு* 35 லட்சம் ரூபாய்க்குட்பட்ட வீட்டுக் கடன் வட்டிக்கு ரூ 50 ஆயிரம் கூடுதல் வரிச்சலுகை* ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் கூடுதல் வரி உயர்த்தப்படுகிறது
கார் - புகையிலை மீதான வரி அதிகரிப்பு* சிறிய ரக கார்களூக்கு 1சதவீதம், டீசல் கார்களுக்கு 2.5 சதவீதம், சொகுசு கார்களுக்கு 4 சதவீத வரி உயர்வு. பெட்ரோல் கார்கள் மீது கட்டமைப்பு வரியாக ஒரு சதவீதம் விதிக்கப்படும். * பீடி தவிர்த்த பிற புகையிலை பொருட்கள் மீது 10 முதல் 15% கூடுதல் வரி விதிக்கப்படும். இதனால் சிகெரெட் விலை உயரும்.
வரிவிலக்கு* அரசு உதவியுடன் 650 சதுர அடிக்குள் கட்டப்படும் வீடுகளுக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கபடும்.* புதிய நிறுவனம் துவங்குவோருக்கு 3 ஆண்டு வரி விலக்கு.
எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி* ராணுவத்துறைக்கு ரூ.2.47 லட்சம் கோடி* கல்விதுறைக்கு ரூ.69,968 கோடி* நீர்வள மேம்பாட்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி * கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.87 ஆயிரத்து 865 கோடி* கிராம சதக் யோஜனா திட்டத்திற்கு ரூ.19 ஆயிரம் கோடி* விவசாய மேம்பாட்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி* பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி * உள் கட்டமைப்பு மேம்படுத்த ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் கோடி* நீர்ப்பாசன திட்டதற்கு 20 ஆயிரம் கோடி* சாலை திட்டத்திற்கு 97 , 000 கோடி* ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்திற்கு ரூ. 500 கோடி* துறைமுக வளர்ச்சிக்கு ரூ.800 கோடி* திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1,700 கோடி* தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி* 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.38,500 கோடி* பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்கு ரூ.500 கோடி.* கிராமப்புற பெண்களுக்கு எல்பிஜி இணைப்பிற்கு ரூ.2 ஆயிரம் கோடி* விவசாய கடனுக்கு ரூ.9 லட்சம் கோடி* பயிர்காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.5,500 கோடி* முத்ரா வங்கிக்கு
தமிழகத்தில் எய்ம்ஸ்
தமிழகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.
பிற அம்சங்கள்* கணக்கில் காட்டாத கறுப்பு பணத்திற்கு 45 சதவீத வரி விதிக்கப்டும்* நிலக்கரி மீதான பசுமை எரிசக்தி வரி டன்னுக்கு ரூ200-ல் இருந்து ரூ400 ஆக உயர்வு* தபால் நிலையங்களில் 3 ஆண்டுகளில் ஏடிஎம் மைக்ரோ ஏடிஎம்களாக மாற்றப்படும்* மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஊக்கம் தரும் வகையில் சுங்கம், கலால்வரியில் மாற்றம்* வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்* தொழில் தொடங்குவதை எளிமையாக்க கம்பெனிகள் சட்டம் திருத்தப்படும்.* ஆதார் அட்டை தொடரும்* 1,500 பன்முகத்திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்
இலக்கு* 2018-க்குள் அனைத்து கிராமங்களிலும் மின் வசதி* 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பது மத்திய அரசின் இலக்கு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)