‘9 துாண்­களில் ஒன்றை காணோம்’; சுற்­றுலா – ஓட்டல் துறை­யினர் வருத்தம்‘9 துாண்­களில் ஒன்றை காணோம்’; சுற்­றுலா – ஓட்டல் துறை­யினர் வருத்தம் ... பேருந்து போக்­கு­வ­ரத்தில் தனி­யா­ருக்கு அனு­மதி பேருந்து போக்­கு­வ­ரத்தில் தனி­யா­ருக்கு அனு­மதி ...
பட்ஜெட் 2016 என்ன சொல்கின்றனர்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
07:29

இந்­திய தொழில் வர்த்­தக சபை (ஐ.சி.சி.ஐ.,) கோவை கிளை தலைவர் நந்­த­குமார்: தொழி­லா­ளர்­க­ளுக்கு முதல் மூன்­றாண்டு பி.எப்., தொகையை, மத்­திய அரசு செலுத்தும் என்ற அறி­விப்பு, தொழி­லா­ளர்கள் பணிக்கு சேரும் விகி­தத்தை அதி­க­ரிக்கும்.
இந்­தியன் டெக்ஸ்­பி­ரனர்ஸ் பெட­ரேஷன் (ஐ.டி.எப்.,) செயலர் பிரபு தாமோ­தரன்:தொடர் வளர்ச்­சிக்­கான பட்ஜெட். செயற்கை பஞ்சு மீதான கலால் வரி, 12.5 சத­வீ­தத்தில் இருந்து, 6 சத­வீ­த­மாக குறைக்­கப்­ப­டா­தது ஏமாற்­ற­ம­ளிக்­கி­றது.
தென்­னிந்­திய மில்கள் சங்க (சைமா) தலைவர் செந்­தில்­குமார்:தொழில்­நுட்ப மேம்­பாட்டு நிதி திட்­டத்தில் நிலு­வைத்­தொகை, 3,000 கோடி ரூபாய் உள்ள நிலையில், இத்­திட்­டத்­திற்கு, 1,480 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு உள்­ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்­தொ­ழில்கள் சங்கம் (காட்மா) தலைவர் ரவி­குமார்: முத்ரா வங்கி திட்­டத்­திற்கு, 1.8 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டு உள்­ளது வர­வேற்­கத்­தக்­கது. வங்கி வட்டி விகி­தத்தை, 10 சத­வீ­த­மாக குறைக்­க­வில்லை. தொழில் துறை­யி­னரின் கோரிக்­கைகள் அதிகம் ஏற்­கப்­ப­ட­வில்லை.
கோவை மாவட்ட பம்ப்செட், உதிரி பாகங்கள் தயா­ரிப்­பா­ளர்கள் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ்: இரண்டு கோடி ரூபாய் வரை, வணிகம் செய்யும் நிறு­வ­னங்­க­ளுக்கு, கலால் வரி கணக்கு துவக்­கு­வதில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. இந்த உச்­ச­வ­ரம்பை, ஐந்து கோடி ரூபா­யாக உயர்த்­தி­இ­ருந்தால், சிறப்­பா­ன­தாக இருந்­தி­ருக்கும்.
தென்­னிந்­திய இன்­ஜி­னி­யரிங் உற்­பத்­தி­யா­ளர்கள் சங்க (சீமா) லட்­சுமி நாரா­ய­ண­சாமி:பம்ப் தொழில் துறை கோரிக்­கைகள் குறித்து அறி­விப்பு வெளி­யி­டா­தது; ஆராய்ச்சி மற்றும் மேம்­பாட்டுத் துறை சலு­கைகள் குறைத்­துள்­ளது உள்­ளிட்ட அறி­விப்­புகள் ஏமாற்­ற­ம­ளிக்­கின்­றன. கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடி­சியா) தலைவர் பொன்­னு­சாமி:பட்ஜெட்டில், 1,500 திறன் மேம்­பாட்டு மையங்கள் அமைக்­கப்­படும் என்ற அறி­விப்பால், திற­மை­யான தொழி­லாளர் பற்­றாக்­குறை பிரச்­னைக்கு தீர்வு ஏற்­படும். குறு, சிறு தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு அளிக்­கப்­பட்­டுள்ள சலு­கைகள் வர­வேற்­கத்­தக்­கது.
தொழில் ஆலோ­சகர் என்.எஸ்.வெங்­கட்­ராமன்: நாடு முழு­வதும், திறன் மேம்­பாட்டு பயிற்சி மையம் அமைக்க இருப்­பதால், குறு, சிறு மற்றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­களில், திறமை வாய்ந்த புதிய தொழில் முனைவோர் கிடைப்பர். இயற்கை எரி­வாயு, நிலம் மற்றும் கடலில் கிடைக்­கி­றது. தமி­ழகம் உட்­பட, பல மாநி­லங்­களில், நிலத்­திற்கு அடியில் இருந்து இயற்கை எரி­வாயு எடுக்க எதிர்ப்பு உள்­ளது. ஆனால், பட்­ஜெட்டில், கடலில் இருந்து இயற்கை எரி­வாயு எடுக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. இதன்­மூலம், இயற்கை எரி­வாயு சார்ந்த தொழில்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கிடைக்கும்.
ரவி­சந்­திரன் புரு­ஷோத்­தமன், தலைவர், ‘டேன்பாஸ் இந்­தியா:’ உணவு பதப்­ப­டுத்­துதல் துறையில், 100 சத­வீத அன்­னிய முத­லீடு, விவ­சாயத் துறைக்கு பெரிதும் ஊக்கம் தரக்­கூ­டி­யது. இதுபோல், இயற்கை விவ­சா­யத்­திற்கும் கூடுதல் முக்­கி­யத்­துவம் தரப்­பட்­டுள்­ளது. இது, வட­ கி­ழக்கு மாநி­லங்கள் போன்ற பகு­தி­க­ளுக்கு, வரப்­பி­ர­சா­த­மாக அமையும்.
சந்­தி­ர­மோகன், முதன்மை நிதி அலு­வலர், ‘டாபே:’வரும், 2019க்குள், அனைத்து கிரா­மங்­க­ளுக்கு மின்­சாரம் வழங்­கப்­படும் என்­பது, உற்­பத்­தியை அதி­க­ரிக்க உதவும். இதுபோல், நெடுஞ்­சா­லை­க­ளுக்கு ஒதுக்­கி­யி­ருக்கும் அதிக நிதி, விவ­சா­யிகள் தங்கள் பொருட்­களை, நக­ரங்­க­ளுக்கு விரை­வாக கொண்­டு­வர உதவும்.
நர­சிம்மன், தலைவர், ‘பிரேக்ஸ் இந்­தியா:’ விவ­சாயம் மற்றும் கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்கும் பல சலு­கைகள், பொரு­ளா­தா­ரத்­திற்கு மறை­மு­க­மாக பெரு­ம­ளவில் ஊக்கம் அளிக்கும். ஆனால், கார்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருக்கும் புதிய வரிகள் பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)