பேருந்து போக்­கு­வ­ரத்தில் தனி­யா­ருக்கு அனு­மதிபேருந்து போக்­கு­வ­ரத்தில் தனி­யா­ருக்கு அனு­மதி ... பெட்ரோல் விலை குறைப்பு: டீசல் உயர்வு பெட்ரோல் விலை குறைப்பு: டீசல் உயர்வு ...
மத்­திய பட்ஜெட்: தொழில் துறை­யினர் அமைதி இங்க என்ன சொல்­லுது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
07:34

புது­டில்லி : மத்­திய நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி, பார்­லி­மென்டில் நேற்று தாக்கல் செய்த, 2016 – 17ம் நிதி­யாண்­டிற்­கான பட்ஜெட், ஒட்­டு­மொத்த தொழில் துறை­யி­னரின் எதிர்­பார்ப்­புக்கு நேர்­மா­றாக இருந்­த­தாக, பலர் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றனர்.
மத்­திய நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி, பார்­லி­மென்டில் நேற்று தாக்கல் செய்த, 2016 – 17ம் நிதி­யாண்­டிற்­கான பட்ஜெட், ஒட்­டு­மொத்த தொழில் துறை­யி­னரின் எதிர்­பார்ப்­புக்கு நேர்­மா­றாக இருந்­த­தாக, பலர் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றனர்.
டில்­லியில், இந்­திய தொழில் கூட்­ட­மைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்­டத்தில் முழு­மை­யாக பிர­தி­ப­லித்­தது. இந்த கருத்துக் கேட்புக் கூட்­டத்தில், பஜாஜ் ஆட்டோ தலைவர் ராகுல் பஜாஜ், ஹீரோ கார்ப்­பரேட் சர்வீஸ் நிறு­வன தலைவர் சுனில் காந்த் முன்ஜால், அப்­பல்லோ ஹாஸ்­பிடல்ஸ் நிறு­வ­னத்தின் செயல் துணை தலைவர் ஷோபனா காமி­னேனி உட்­பட, 40க்கும் மேற்­பட்ட தொழி­ல­தி­பர்கள் கலந்து கொண்­டனர். அருண் ஜெட்­லியின் பட்ஜெட் உரை, பிரம்­மாண்­ட­மான திரையில் ஒளி­ப­ரப்­பா­னது. தொடக்­கத்தில், வேளாண்மை, கிரா­மப்­புற மேம்­பாடு குறித்து அருண் ஜெட்லி உரை­யாற்­றிய போது, ஒரு சிலர் குறிப்­பெ­டுத்துக் கொண்­டனர். ‘நிதி பற்­றாக்­குறை, 3.5 சத­வீ­த­மாக குறைக்­கப்­படும்’ என, கூறிய போது, ராகுல் பஜாஜ், கைதட்டி மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தினார்.அதே சமயம், ‘பண்டிட் தீன­தயாள் உபாத்­யாயா, குரு­கோவிந்த் சிங் ஆகி­யோரின் பிறந்த நாள் விழா­விற்­காக, 100 கோடி ரூபாய் ஒதுக்­கப்­படும்’ என அறி­வித்த போது, சிலர் அதை ரசிக்­க­வில்லை.
‘டிவி­டெண்­டு’க்கு, 10 சத­வீத வரி அறி­விப்பு வெளி­யான போது கூட்­டத்தில் ஒரு­வித அசா­தா­ரண சூழல் நில­வி­யது. ஆனால், ‘வரி­களை எளி­மை­யாக்கி, வரி விதிப்பில் சீர்­தி­ருத்தம் செய்­யப்­படும்’ என, அருண் ஜெட்லி கூறிய போது பலர் தலை­நி­மிர்ந்­தனர். பட்ஜெட் உரை முடிந்த பின், செய்­தி­யா­ளர்­களை சந்­தித்த தொழி­ல­தி­பர்கள், வரி விதிப்பு, ஏற்­று­ம­தியில் சரிவு உள்­ளிட்ட அடுக்­க­டுக்­கான கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யாமல் திண­றினர். சிலர் கருத்து கூற விரும்­பாமல் வெளி­யே­றினர்.
ஏழை மற்றும் கிரா­மப்­புற மக்­க­ளுக்கு ஆத­ர­வான பல விஷ­யங்கள் இந்த பட்­ஜெட்டில் இருந்­ததால் குறை கூறவும் மன­தில்­லா­மலும், அதே சமயம், தொழில் துறையின் சில எதிர்­பார்ப்­புகள் நிறை­வே­றா­ததால் அமை­தியும் காத்­தனர். இந்­திய தொழில் கூட்­ட­மைப்பு தலைவர் சுமித் மசூம்­தா­ரிடம், ஒரு நிருபர், ‘இந்த பட்ஜெட், மக்­க­ளுக்கு அதி­க­மா­கவும்; தொழில் துறைக்கு குறை­வா­கவும் செய்­தது போல் உள்­ளதே’ என கேட்டார்.
அதற்கு, சமித் மசூம்தார், ‘‘இது, வளர்ச்­சியை கருத்தில் கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட முன்­னேற்­றத்­திற்­கான பட்ஜெட்; மிகவும் நல்ல பட்ஜெட்,’’ என்றார்.
மொத்­தத்தில் கருத்து கேட்புக் கூட்­டத்­திற்கு வந்­தி­ருந்த தொழி­ல­தி­பர்­களின் உத­டுகள் உச்­ச­ரித்­தது வேறா­கவும், உள்ளம் உச்­ச­ரிக்க விரும்­பி­யது வேறா­கவும் இருப்­பதைப் போலவே தோற்றம் காட்­டி­யது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)