பதிவு செய்த நாள்
01 மார்2016
23:31

மும்பை : நேற்று பங்கு சந்தையைப் போல், அன்னியச் செலாவணி சந்தையும் எழுச்சியுடன் காணப்பட்டது.பங்குச் சந்தையின் ஏற்றம் காரணமாக, வங்கிகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்தன. அதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, மூன்று வாரங்களில் இல்லாத அளவிற்கு, 57 காசுகள் அதிகரித்து, 67.85 ஆக உயர்ந்தது. இந்தாண்டு துவங்கி, கடந்த இரு மாதங்களில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 0.83 சதவீதம் உயர்ந்தது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக தகவல் வெளியானது. அதனால், டாலர் மற்றும் யூரோ கரன்சிகளுக்கு நிகரான, அன்னியச் செலாவணி மதிப்பு அதிகரித்தது. இதுவும், இந்திய ரூபாய் மதிப்பின் உயர்வுக்கு துணை புரிந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|