பதிவு செய்த நாள்
01 மார்2016
23:33

புதுடில்லி : ராயல் என்பீல்டு நிறுவனத்தின், மோட்டார் சைக்கிள் விற்பனை, கடந்த பிப்ரவரியில், 63 சதவீதம் அதிகரித்து, 49 ஆயிரத்து, 156ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 30 ஆயிரத்து, 240ஆக இருந்தது. இதே காலத்தில், 350 சி.சி., மோட்டார் சைக்கிள் விற்பனை, 65 சதவீதம் உயர்ந்து, 26 ஆயிரத்து, 492லிருந்து, 43 ஆயிரத்து, 741ஆக அதிகரித்துள்ளது.இதைவிட அதிக இன்ஜின் திறன் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை, 45 சதவீதம் உயர்ந்து, 3,748லிருந்து, 5,415ஆக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி, 112 சதவீதம் உயர்ந்து, 749லிருந்து, 1,589ஆக அதிகரித்துள்ளது. எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த, ராயல் என்பீல்டு, சென்னையில் இரண்டு தொழிற்சாலைகளுடன் இயங்கி வருகிறது. அவற்றில், ‘புல்லட், தண்டர்பேர்டு, டெசர்ட் ஸ்குவாட்ரான்’ உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்கள் தயாராகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|