பதிவு செய்த நாள்
01 மார்2016
23:34

புதுடில்லி : மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, கடந்த பிப்ரவரியில், 1,17,451ஆக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1,18,551ஆக இருந்தது.இதே காலத்தில், உள்நாட்டில் கார் விற்பனை, 1,07,892லிருந்து, 1,08,115ஆக சற்றே உயர்ந்துள்ளது.‘ஸ்விப்ட், எஸ்டிலோ, ரிட்ஸ், டிசயர், பலேனோ’ ஆகிய கார்கள் விற்பனை, 42,778லிருந்து, 42,970ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கார் ஏற்றுமதி, 12.4 சதவீதம் சரிவடைந்து, 10,659லிருந்து, 9,336ஆக குறைந்துள்ளது.ஹரியானாவில், ‘ஜாட்’ சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டத்தால், அங்குள்ள மாருதி தொழிற்சாலையில் கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதனால், 10 ஆயிரத்திற்கும் மேலான கார் தயாரிப்பு பாதிக்கப்பட்டது. ‘இருந்தபோதிலும், உள்நாட்டு கார் விற்பனை, ஓரளவு உயர்ந்துள்ளது’ என, மாருதி சுசூகி இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|