பதிவு செய்த நாள்
01 மார்2016
23:36

புதுடில்லி : இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், பஸ், டிரக் உள்ளிட்ட வாகனங்களை தயாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 25 சதவீதம் உயர்ந்து, 13,403ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, 10,762ஆக இருந்தது.இதே காலத்தில், நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை, 31 சதவீதம் அதிகரித்து, 8,230லிருந்து, 10,798ஆக உயர்ந்துள்ளது. இலகுரக வாகனங்கள் விற்பனை, 2,532லிருந்து, 2,605ஆக அதிகரித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு, சென்னை, ஓசூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில், பயணிகளுக்கான சொகுசு பஸ், பாதுகாப்பு துறைக்கு தேவையான கனரக டிரக்குகள், வர்த்தக பயன்பாட்டிற்கான இலகுரக வாகனங்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|