பதிவு செய்த நாள்
01 மார்2016
23:40

புதுடில்லி : ‘இந்தியாவில், தயாரிப்பு துறைக்கு சாதகமான சூழல் உள்ள போதிலும், கடந்த பிப்ரவரியில், அத்துறையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லை’ என, நிக்கி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின், தயாரிப்பு துறைக்கான, எம்.பி.எம்.ஐ., குறியீடு, இந்தாண்டு, ஜனவரியைப் போல, பிப்ரவரியிலும், 51.1 புள்ளிகள் என்ற அளவில், ஏற்றத் தாழ்வின்றி, உள்ளது தான், இந்த அறிவிப்பிற்கு காரணம்.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: பிப்ரவரியில், தயாரிப்பு துறைக்கு, ஏராளமான புதிய ‘ஆர்டர்’ கிடைத்துள்ளது. ஏற்றுமதியும், உற்பத்தியும் அதிகரித்துள்ளன. எனினும், புதிய வர்த்தகங்கள் வேகமாக அதிகரித்து வருவதால், இத்துறையின் வளர்ச்சி, ஏற்றத் தாழ்வின்றி உள்ளது. இதற்கு, விலை உயர்வு விகிதமும், விற்பனை விலை விகிதமும் குறைவாக உள்ளதும் ஒரு காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|