பதிவு செய்த நாள்
01 மார்2016
23:44

மும்பை : நேற்று முன்தினம் வெளியான, மத்திய பட்ஜெட்,நேற்று, இந்திய பங்குச் சந்தையில் ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’, கடந்த, 7 ஆண்டுகளுக்குப் பின், 777.35 புள்ளிகள் அதிகரித்து, 23,779.35 புள்ளிகளில் நிலை கொண்டது.
தெம்பை அளித்தது :தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 235.25 புள்ளிகள் உயர்ந்து, 7,222.30 புள்ளிகளில் நிலைபெற்றது. ‘‘பங்குச் சந்தையின் இந்த எழுச்சிக்கு,‘நாட்டின் நிதிப்பற்றாக்குறை இலக்கு, 3.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பட்ஜெட் உரையில் தெரிவித்தது தான் காரணம்,’’ என்கிறார், பார்க்லேஸ் நிதி நிறுவனத்தின் கருவூல அதிகாரி, அனிந்தயா தாஸ்குப்தா.நடப்பு நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை, 3.9 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில், அது மேலும் உயர்த்தப்படும் என, பங்கு சந்தையில் எதிர்பார்ப்பு நிலவியது. அவ்வாறு அதிகரிக்கும்பட்சத்தில், வங்கிகளின் வட்டி விகிதம் உயரும்; பணவீக்கம், விலைவாசி அதிகரிக்கும் என்ற அச்சத்தினால், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் துவங்கினர். இதனால், கடந்த ஒரு மாதத்தில், சென்செக்ஸ், ஆயிரத்திற்கும் அதிகமான புள்ளிகளை இழந்தது.
இந்நிலையில்,சந்தை எதிர்பார்ப்பிற்கு மாறாக, பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறை இலக்கை, 0.4 சதவீதம் குறைத்துள்ளது, பங்கு முதலீட்டாளர்களுக்கு தெம்பை அளித்துள்ளது. ஒருவழியாக பட்ஜெட் நிதி நிலை குறித்த பரீட்சையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாஸாகிவிட்டார். இந்நிலையில் மார்க்கெட்டின் அடுத்த எதிர்பார்ப்பு ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வரிவிகித குறைப்புக்கான பரீட்சையில் பாஸ் ஆவாரா என்பதை நோக்கி திரும்பி இருக்கிறது.அதாவது பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு குறைக்கப்பட்டதை அடிப்படையாக வைத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ‘ரெப்போ’ விகிதத்தை, ஏப்ரலில் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேற்றைய பங்கு வர்த்தகத்தைப் பொறுத்தவரை பற்றாக்குறை இலக்கு மட்டுமின்றி, எதிர்மறை தாக்கத்தை உண்டாக்காத வரிகள், பங்குகள் மீதான,மூலதன ஆதாய வரிச் சலுகை நீட்டிப்பு போன்றவற்றாலும் சூடு பிடித்தது. அதுபோல, அன்னியச் செலாவணி சந்தையிலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்தது.
தொடர வாய்ப்பு : அதேவேளையில்,சீனாவும், நிதி சீர்திருத்த அறிவிப்பை வெளியிட்டதால், ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட இதர ஆசிய பங்குச் சந்தைகளும் ஏற்றம் கண்டன.‘இந்திய பங்குச் சந்தையின் இந்த எழுச்சி, வரும் நாட்களிலும் தொடர வாய்ப்பு உள்ளது’ என, நிதி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ரகுராம் ராஜனும் அவர் பங்குக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சூடான விற்பனை : நேற்று, தேசிய பங்குச் சந்தையில், வங்கிப் பங்குகளின் விலை, எட்டு சதவீதம் வரை அதிகரித்தது. அதுபோல, வாகனம், ரியல் எஸ்டேட் உட்பட பல துறைகளின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|