செலவை குறைக்க மாற்று யோசனை!செலவை குறைக்க மாற்று யோசனை! ... தொழிற்­சா­லைகள் வெளி­யிடும் மாசு; புதிய நெறி­மு­றைகள் அறி­விப்பு தொழிற்­சா­லைகள் வெளி­யிடும் மாசு; புதிய நெறி­மு­றைகள் அறி­விப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஓய்­வூ­தியம் அளிக்கும் ‘ஆன்யுவிட்டி’ திட்­டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2016
07:36

பி.எப்., நிதி தொடர்­பான வரி விதிப்பு பெரும் எதிர்ப்­பையும், சர்ச்­சை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், ‘ஆன்யுவிட்டி’ எனப்­படும் ஓய்­வூ­திய திட்­டங்கள் மீதும் கவனம் திரும்பி உள்­ளது.
எப்­போதும் போலவே, மத்­திய பட்­ஜெட்டில் தனி­நபர் வரு­மான வரி உச்­ச­வ­ரம்பு தொடர்­பான எதிர்­பார்ப்பு பர­வ­லாக இருந்­தது. ஆனால், இதில் எந்த மாற்­றமும் செய்­யப்­ப­ட­வில்லை. இதனால், மத்­திய தர மக்கள் ஒரு பக்கம் ஏமாற்றம் அடைந்­தாலும்; இன்­னொரு பக்கம், பி.எப்., எனப்­படும் வருங்­கால வைப்பு நிதிக்கு வரி விதிக்­கப்­பட திட்­ட­மிடப்­பட்­டி­ருப்­பது தொடர்­பான அறி­விப்பு தான் அவர்­களை திகைப்பில் ஆழ்த்­தி­யது. பி.எப்., நிதியை விலக்கி கொள்ளும் போது, 40 சத­வீ­தத்­திற்கு வரி விலக்கு உண்டு, மீதி, 60 சத­வீத தொகை, வரிக்கு உட்­படும் என பட்­ஜெட்டில் தெரி­விக்­கப்­பட்­டது; இது எதிர்ப்­புக்கு இலக்­கா­னது. இதை­ய­டுத்து. பி.எப்., நிதி முழு­வதற்கும் வரி விதிப்பு கிடை­யாது; ஆனால், 60 சத­வீத தொகைக்­கான வட்­டிக்கு மட்­டுமே வரி உண்டு என விளக்கம் அளிக்­கப்­பட்­டது.
மறு­ப­ரி­சீ­லனை :பி.எப்., நிதிக்கு வரி விதிப்­பது அடிப்­ப­டையில் சரியா எனும் கேள்­வியும் கேட்­கப்­ப­டு­கி­றது. இதனிடையே, பி.எப்., வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால், பி.எப்., வச­தியை விட தேசிய பென்ஷன் திட்­ட­மான, என்.பி.எஸ்., மேலும் ஈர்ப்­பு­டை­ய­தா­குமா? எனும் கேள்­வியும் எழுந்­துள்­ளது. இத­னி­டையே, நிதி அமைச்­சகம் அளித்த விளக்­கத்தில், பி.எப்.,பின், 60 சத­வீத தொகை, ஆன்யுவிட்டி திட்­டங்­களில் முத­லீடு செய்­யப்­பட்டால், முழு வரி விலக்கு உண்டு என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பென்ஷன் பாது­காப்பு அளிக்கும் ஆன்யுவிட்டி வச­தியை, அதிக அளவில் பயன்­படுத்தச் செய்­வதே இந்த வரி விதிப்பு திட்டத்தின் நோக்கம் என்றும் விளக்கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.
ஓய்­வூ­திய அம்சம் :ஆன்யுவிட்டி திட்­டங்கள் என்­பவை அடிப்­ப­டையில் காப்­பீடு நிறு­வ­னங்­களால் அளிக்­கப்­படும் ஓய்­வூ­திய திட்­டங்கள். இவற்றில் பெரிய அள­வி­லான தொகையை முத­லீடு செய்தால், ஓய்வு பெற்ற பின் தொடர்ந்து ஓய்­வூ­தியம் பெறலாம்.பொது­வாக ஓய்­வூ­திய வசதி இல்­லா­த­வர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், பாது­காப்­பான வரு­மா­னத்தை பெற இவை வழி செய்­கின்­றன. ஆன்யுவிட்டி திட்­டங்­களில் இரண்டு வகை இருக்­கின்­றன. ஒன்று, உட­னடி ஆன்யுவிட்டி திட்டம்; இவற்றில், துவக்­கத்தில் அதிக அள­விலான ஒற்றை பிரி­மியம் செலுத்­தினால், அதன் பின் ஓய்­வூ­தியம் பெற முடியும். இந்த தொகை, மாத அடிப்­ப­டையில், காலாண்டு அடிப்­ப­டையில் அல்­லது ஆண்டு அடிப்­ப­டையில் வழங்­கப்­படும்.டிபர்டு ஆன்யுவிட்டி எனப்­படும் திட்டத்தில், முதலில் ஒற்றை பிரி­மியம் செலுத்­தலாம் அல்­லது தொடர்ந்து பிரி­மியம் செலுத்­தலாம். சேரும் தொகைக்­கேற்ப பணி­யி­லி­ருந்து ஓய்வு பெற்ற பின், ஓய்­வூ­திய பலனை பெற முடியும்.முதல் திட்­டத்தில், ஆரம்­பத்­தி­லேயே வட்டி விகிதம் தீர்­மா­னிக்­கப்­படும்.
இரண்­டா­வது திட்­டத்தில், சேரும் தொகைக்­கேற்ப தீர்­மா­னிக்­கப்­படும்.ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவ­ருக்கு நிலை­யான வரு­மா­னத்தை அளிக்க வழி செய்­வதே ஆன்யுவிட்டி திட்­டங்­களின் நோக்­க­மாகும். இந்­தி­யாவில் இப்­போது, காப்­பீடு நிறு­வ­னங்­களே இவற்றை வழங்கி வரு­கின்­றன.பி.எப்., நிதி என்­பது வாழ்நாள் சேமிப்­பாக இருந்­தாலும், ஓய்­வுக்கு பின் பலரும் அதை பல்­வேறு தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தி­வி­டு­வதால், ஓய்­வூ­திய பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாகி விடு­வ­தாக கரு­தப்­ப­டு­கி­றது. எனவே அந்த தொகையின் பெரும் பகு­தியை ஆன்யுவிட்டி திட்­டங்­களில் முத­லீடு செய்தால், வாழ்நாள் முழு­வதும் கவலை இல்­லாமல் இருக்­கலாம் என கரு­தப்­ப­டு­கி­றது.
பாத­க­மான அம்­சங்கள் :ஆனால், ஓய்­வூ­திய நோக்­கத்தை மீறி இவை பெரிய அளவில் கவ­ராமல் இருப்­ப­தற்கு கார­ணங்கள் இல்­லாமல் இல்லை. முதலில் இந்த வகை திட்­டங்­களில் கிடைக்கும் வரு­மானம் குறை­வா­ன­தாக இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது. இவை, 6 முதல் 9 சத­வீத வட்டி விகித பல­னையே அளிக்­கின்­றன. இவை குறைவு என்­ப­தோடு, பல ஆண்­டு­க­ளுக்கு பின் நிலவக் கூடிய பண­வீக்­கத்தை கருத்தில் கொண்டால் மேலும் குறைந்­த­தா­கி­விடும். அது மட்­டு­மல்­லாமல், இந்த வரு­மானம் வரி விதிப்­புக்கு உட்­பட்­டது என்­ப­தையும் கவ­னிக்க வேண்டும். மேலும் இந்த பணத்தை நடுவே எடுக்க முடி­யாது; இதன் மீது கடனும் பெற முடி­யாது. பாலி­சி­தா­ர­ருக்கு பின் அந்த பலன் குடும்­பத்­தி­ன­ருக்கு அளிக்­கப்­படும்.இந்­தி­யாவில் ஓய்­வூ­தியம் சார்ந்த காப்­பீடு திட்­டங்கள் இன்­னமும் முழு­மை­யாக வளர்ச்சி பெறாமல் இருக்­கின்­றன என்ற கருத்தும் இருக்­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)