புதிய அமைப்­புகள் ஆரம்பம்; நலிந்த நிறு­வ­னத்துக்கு வாய்ப்புபுதிய அமைப்­புகள் ஆரம்பம்; நலிந்த நிறு­வ­னத்துக்கு வாய்ப்பு ... ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் புதிய கொள்கை; புதிய பாணி ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் புதிய கொள்கை; புதிய பாணி ...
தடை செய்­யப்­பட்ட மருந்து விற்­பனை: புதிய புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2016
06:59

புது­டில்லி : ‘வெளி­நா­டு­களில் தடை செய்­யப்­பட்ட மருந்தின், உள்­நாட்டு விற்­பனை தொடர்­பான விசா­ர­ணையை துவக்க, மத்­திய அர­சுக்கு உத்­த­ர­விட வேண்டும்’ என, குர்­கானைச் சேர்ந்த, தினேஷ் தாகூர் என்­பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொது­நல மனு தாக்கல் செய்­துள்ளார்.
அதன் விவரம்: பெல்­ஜி­யத்தை சேர்ந்த யு.சி.பி., நிறு­வனம், ‘புக்­லிசைன்’ என்ற மருந்தை தயா­ரித்து வரு­கி­றது. இது, ‘பசியை துாண்டும் மருந்து’ என, இந்­தி­யாவில் விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. இதற்கு, 2006ல், மத்­திய மருந்து தரக் கட்­டுப்­பாட்டு அமைப்பு, அனு­மதி அளித்­து உள்­ளது. பல நாடு­களில் தடை விதிக்­கப்­பட்ட இந்த மருந்தை, ‘மேன்­கைன்டு பார்மா’ என்ற நிறு­வனம் விற்­பனை செய்து வரு­கி­றது. இது­கு­றித்த புகாரை விசா­ரித்த, இந்­திய மருந்து தரக் கட்­டுப்­பாட்டு அமைப்பின் வல்­லுனர் குழு, ‘குறிப்­பிட்ட மருந்து, ‘பசியை துாண்டும்’ என்­ப­தற்கு ஆதா­ர­மில்லை’ என, தெரி­வித்­தது. இதை­ய­டுத்து, 2013ல், இந்த விவ­கா­ரத்தை விசா­ரித்த பார்லி., குழு, ‘மருந்து தரக் கட்­டுப்­பாட்டு அமைப்பு, ‘புக்­லிசைன்’ மருந்தின் தரம் குறித்து விசா­ரணை மேற்­கொள்ள வேண்டும்’ என, மத்­திய அர­சுக்கு அறிக்கை அளித்­தது.
மூன்று ஆண்­டுகள் கடந்த நிலையில், ‘விசா­ரணை எந்த அளவில் உள்­ளது’ என, தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் கேட்­கப்­பட்­டது. அப்­போது, ‘இன்னும் விசா­ரணை துவங்­க­வில்லை’ என, மத்­திய சுகா­தார அமைச்­ச­கத்­திடம் இருந்து பதில் வந்­தது. எனவே, வெளி­நா­டு­களில் தடை செய்­யப்­பட்ட, ‘புக்­லிசைன்’ போன்ற மருந்­துகள் பற்­றிய விசா­ர­ணையை உட­ன­டி­யாக துவக்க, சுகா­தார அமைச்­ச­கத்­திற்கு உத்­த­ர­விட வேண்டும். தற்­போது, மருந்­து­களின் தரம் நிர்­ண­யிக்­கப்­பட்ட அளவில் இல்­லை­யென்றால், அப­ராதம் தான் விதிக்க முடி­யுமே தவிர, கிரி­மினல் நட­வ­டிக்கை எடுக்க சட்­டத்தில் இட­மில்லை. இதனால், தடை செய்­யப்­பட்ட மருந்­து­களை, வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் இந்­தி­யாவில் விற்­கின்­றன. இதை தடுக்க, அரசு உரிய நட­வ­டிக்கை எடுக்­கவும் உத்­த­ர­விட வேண்டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டுள்­ளது.
சாதா­ரண ஆளில்லை:ரான்­பாக்ஸி லேப­ரேட்­டரிஸ் நிறு­வ­னத்தின், முன்னாள் ஊழி­ய­ரான தினேஷ் தாகூர், மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன், அந்­நி­று­வ­னத்தின் தர ஆய்வுக் குறை­பா­டு­க­ளையும், விதி­மீ­றல்­க­ளையும் அம்­ப­லப்­ப­டுத்­தினார். இதை­ய­டுத்து, அமெ­ரிக்க மருந்து கட்­டுப்­பாட்டு கழகம், ரான்­பாக்­சயின் குறிப்­பிட்ட மருந்­து­க­ளுக்கு தடை விதித்து, 50 கோடி டாலர் அப­ராதம் வசூ­லித்­தது. அதில், உண்­மையை வெளிச்­சத்­திற்கு கொண்டு வந்­த­தற்­காக, தினேஷ் தாகூ­ருக்கு, 5 கோடி டாலர் வழங்­கப்­பட்­டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)