தடை செய்­யப்­பட்ட மருந்து விற்­பனை: புதிய புகார்தடை செய்­யப்­பட்ட மருந்து விற்­பனை: புதிய புகார் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.27 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.27 ...
‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் புதிய கொள்கை; புதிய பாணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2016
07:00

புது­டில்லி : இது­வரை, விற்­ப­னையில் மட்­டுமே குறி­யாக இருந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள், இழப்பில் இருந்து இன்னும் லாப பாதைக்கு திரும்­பாத கார­ணத்தால், இனி, நீண்ட கால வளர்ச்­சியை கருத்தில் கொண்டு, நிதா­ன­மாக நடை­போ­டு­வது என, முடிவு செய்­துள்­ளன.
வலை­த­ளங்கள் வாயி­லாக, புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள், சந்தைப் போட்­டியால், வாடிக்­கை­யா­ளர்­களை கவர, ஏரா­ள­மான சலு­கை­களை வாரி வழங்கி வந்­தன.குறிப்­பாக, உணவுப் பொருட்கள், நகர்­புற மக்­க­ளுக்­கான ஆடம்­பர சாத­னங்கள் போன்­ற­வற்றின் வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு வந்த நிறு­வ­னங்கள், ரொக்கத் தள்­ளு­படி உட்­பட, பல்­வேறு சலு­கை­களை வழங்­கின. அதனால் ஏற்­பட்ட இழப்­பையும் அவை தாங்கிக் கொண்­டன. ‘விற்­ப­னையை உயர்த்­தினால், லாபம் தானாக கிடைக்கும்’ என, அவை போட்ட கணக்கு, எதிர்­பார்த்த பலனைத் தர­வில்லை.அதனால், அந்­நி­று­வ­னங்­களில் முத­லீடு செய்­துள்ள பன்­னாட்டு நிதி நிறு­வ­னங்கள், நெருக்­கடி கொடுக்கத் துவங்­கி­யுள்­ளன. அது­போன்ற நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­வ­தற்கு, தயங்கும் நிலையும் ஏற்­பட்­டுள்­ளது.
‘வர்த்­தக செயல்­பா­டு­களை மேம்­ப­டுத்தி, உற்­பத்­தியைப் பெருக்க வேண்டும்; செல­வு­களைக் குறைத்து, லாப பாதைக்கு திரும்ப வேண்டும்’ என, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு, முத­லீட்­டா­ளர்கள், ‘செக்’ வைத்­துள்­ளனர். இந்­தி­யாவில், வலை­தளம் மூலம், பொருட்­களை விற்­பதில் முத­லி­டத்தில் உள்ள, ‘பிளிப்கார்ட்’ இன்னும் லாபம் காணாமல் உள்­ளது. அதனால், அந்­நி­று­வ­னத்தில் முத­லீடு செய்­வ­தற்­கான மதிப்பை, மார்கன் ஸ்டான்லி நிறு­வ­னத்தின் ஆய்வுப் பிரிவு, 27 சத­வீதம் குறைத்­துள்­ளது. இதை­ய­டுத்து பிளிப்கார்ட், நீண்ட கால வளர்ச்­சியை கருதி, சிக்­கன நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளத் துவங்­கி­யுள்­ளது.
அதே­ச­மயம், அடுத்த, ஓராண்டு முதல், இரண்டு ஆண்­டு­க­ளுக்குள் லாபம் கிடைக்கும் என்ற மதிப்­பீட்டில், புதிய தொழில்­நுட்­பத்தில் வர்த்­த­கத்தை துவக்கும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கும் முத­லீட்­டா­ளர்­களின் ஆத­ரவு கிடைத்து வரு­கி­றது.அவை, ஏற்­க­னவே கையை சுட்டுக் கொண்ட நிறு­வ­னங்­களின் வர­லாற்றை அறிந்­துள்­ள­ப­டியால், மிகுந்த எச்­ச­ரிக்­கை­யுடன், ‘விற்­ப­னை­யுடன் சேர்ந்த வளர்ச்சி’ என்ற கொள்­கையை கடை­பி­டிக்­கின்­றன.
தாக்கம்* கடந்த, 2015ல், முத­லீட்­டா­ளர்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களில், 500 கோடி டால­ருக்கும் அதி­க­மாக முத­லீடு செய்­துள்­ளனர்* இந்­நி­று­வ­னங்­களில், சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள் முத­லீடு செய்ய தயங்­கு­வது, உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளிடம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)