பதிவு செய்த நாள்
09 மார்2016
07:13
புதுடில்லி : பிரபல மருந்துத் துறை நிறுவனமான சன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், தனது ‘ரிவிட்டல் எச்’ பிராண்டுக்கான துாதராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை நியமித்திருக்கிறது. ‘தோனியுடனான இந்த தோழமையால் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் எங்களது இருப்பை இன்னும் அதிகமாக தெரிய வைக்க முடியும். மேலும், எங்களது பிராண்டை ஆக்டிவ் லைப்ஸ்டைல் பக்கமாக திருப்பி மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியும். ‘எங்களது வாடிக்கையாளர்களிடம் நடத்திய சர்வே முடிவுகளின்படியே தோனியை நாங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.‘இந்தியாவைப் பொருத்தவரை புரதச் சத்து மற்றும் ஆரோக்கிய உணவுக்கான கூடுதல் சேர்க்கை மார்க்கெட் 8,828 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. ‘மேலும், 12 சதவீத வளர்ச்சியையும் கண்டுவருகிறது அதில் உள்ள முக்கியமான பத்து பிராண்டுகளில் நாங்களும் ஒன்றாக இருக்கிறோம்’ என, சன் பார்ம சூட்டிக்கல்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|