கிரிக்கெட் வீரர் தோனி ‘சன் பார்மா’ துாத­ரா­கிறார்கிரிக்கெட் வீரர் தோனி ‘சன் பார்மா’ துாத­ரா­கிறார் ... சகோ­த­ரர்­க­ளுக்குள் போட்டி: ‘கேபிள் டிவி’ தொழிலை கைப்­பற்ற முகேஷ் அம்­பானி அதி­ரடி சகோ­த­ரர்­க­ளுக்குள் போட்டி: ‘கேபிள் டிவி’ தொழிலை கைப்­பற்ற முகேஷ் ... ...
வேலை வாய்ப்பில் இந்­தியா முத­லிடம்: ஆராய்ச்சி முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2016
07:15

புது­டில்லி : ‘உல­க­ளவில், வேலை­வாய்ப்­பு­களை வழங்­கு­வதில், இந்­தியா முத­லிடம் வகிக்கும்’ என, மேன்­பவர் குரூப் இந்­தியா நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
இந்­நி­று­வனம், பல்­வேறு துறை­களைச் சேர்ந்த நிறு­வ­னங்கள், வரும், ஏப்., – ஜூன் வரை­யி­லான காலத்தில் வழங்க உள்ள வேலை­வாய்ப்பு குறித்து, 41 நாடு­களில் ஆய்வு மேற்­கொண்­டது. இதில், இதர நாடு­களை விட, இந்­திய நிறு­வ­னங்கள் தான், அதி­க­மா­னோரை வேலைக்கு அமர்த்த திட்­ட­மிட்­டி­ருப்­பது, தெரி­ய­வந்­துள்­ளது.
இது குறித்து, மேன்­பவர் குரூப் நிறு­வ­னத்தின், இந்­திய பிரிவின் நிர்­வாக இயக்­குனர் ஏ.ஜி.ராவ் கூறி­ய­தா­வது:இந்­தி­யாவில், 5,203 நிறு­வ­னங்­க­ளிடம் ஆய்வு நடத்­தப்­பட்­டது. அதில், 38 சத­வீத நிறு­வ­னங்கள், அடுத்த மாதம் முதல், பணி­யா­ளர்­களின் எண்­ணிக்­கையை உயர்த்த உள்­ள­தாகத் தெரி­வித்­து உள்­ளன. இதில், தயா­ரிப்பு துறையில், 43 சத­வீதம், சேவைகள் துறையில், 40 சத­வீதம், சுரங்கம் மற்றும் கட்­டு­மான துறையில், 38 சத­வீதம் பேர் என, வேலைக்கு ஆட்­களைத் தேர்ந்­தெ­டுக்க உள்­ளன.பல்­வேறு துறை­களில் அன்­னிய முத­லீடு அதி­க­ரித்து வரு­வதை அடுத்து, இந்­திய பொரு­ளா­தாரம், வேக­மான வளர்ச்­சியை நோக்கி அடி­யெ­டுத்து வைத்­து உள்­ளது.
வெளி­நாட்டு நிறு­வ­னங்கள், ‘மேக் இன் இந்­தியா’ திட்­டத்தின் கீழ், இந்­தி­யாவில் தயா­ரிப்பு சார்ந்த தொழில்­களை துவக்­கு­வதில் ஆர்வம் காட்டி வரு­கின்­றன. அதற்கு மேலும் வலு­சேர்க்கும் வகையில், மத்­திய அரசின், 2016 – 17ம் நிதி­யாண்டு பட்ஜெட், அதிக அளவில் அன்­னிய முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­கான வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளது. சீனாவின் பொரு­ளா­தார மந்த நிலை, கச்சா எண்ணெய் விலை சரிவு போன்­ற­வற்றால், உல­க­ளவில், ஆட்­களை பணிக்கு சேர்ப்­பதில், நிறு­வ­னங்கள் நிதான போக்கை கடை­பி­டிக்­கின்­றன. அதற்கு நேர்­மா­றாக இந்­தியா உள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.
எட்டு நாடு­க­ளிலும்...ஆசிய – பசிபிக் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த, எட்டு நாடு­க­ளிலும், வரும் ஏப்., – ஜூன் வரை­யி­லான காலாண்டில், வேலை­வாய்ப்பு அதி­க­ரிக்கும். இது, இந்­தியா, ஜப்பான் நாடு­களில் மிக அதி­க­மா­கவும், சீனா, ஆஸ்­தி­ரே­லி­யாவில் மிகக் குறை­வா­கவும் இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)