வேலை வாய்ப்பில் இந்­தியா முத­லிடம்: ஆராய்ச்சி முடிவுவேலை வாய்ப்பில் இந்­தியா முத­லிடம்: ஆராய்ச்சி முடிவு ... ரூபாயின் மதிப்பு ரூ.67.21-ஆக உயர்வு ரூபாயின் மதிப்பு ரூ.67.21-ஆக உயர்வு ...
சகோ­த­ரர்­க­ளுக்குள் போட்டி: ‘கேபிள் டிவி’ தொழிலை கைப்­பற்ற முகேஷ் அம்­பானி அதி­ரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2016
07:16

மும்பை : மொபைல் போன் சேவையில் இறங்க உள்ள, முகேஷ் அம்­பா­னியின் ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வனம், இந்­தி­யாவின், ‘கேபிள் டிவி’ தொழி­லையும் வளைத்துப் போட, அதி­ரடி திட்டம் வகுத்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
இது குறித்து, தொலை தொடர்பு வட்­டா­ரங்கள் கூறிய தகவல்: முகேஷ் அம்­பானி, ‘4ஜி’ மொபைல் போன் சேவை வழங்க, ‘ஆர்­ஜியோ’ என்ற நிறு­வ­னத்தை, 2010ல் துவக்­கினார். கடந்த, ஆறு ஆண்­டு­க­ளாக, 1,800 கோடி டாலர் முத­லீட்டில், அனைத்து, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளையும் உரு­வாக்­கி­யுள்ளார். இந்­தாண்­டுக்குள், நாடு முழு­வதும், மொபைல் போன் மற்றும் இணை­ய­தள சேவைகள் வழங்­கப்­பட உள்­ளன. இத்­துடன், நாடு தழு­விய அளவில், ‘கேபிள் டிவி, டி.டி.எச்.,’ சேவை­க­ளையும் வழங்க, ஆர்­ஜியோ திட்­ட­மிட்­டுள்­ளது. அவற்றின் வாயி­லாக, இந்­தியா மற்றும் இதர நாடு­களின் திரைப்­ப­டங்கள், சர்­வ­தேச தொலைக்­காட்சி தொடர்கள் ஆகி­ய­வற்றை, ‘ஜியோ பிளே’ என்ற, துணை பிரிவின் மூலம் வழங்க உள்­ளது. இதற்­காக, ‘கேபிள் டிவி’ சேவையில் ஈடு­பட்­டுள்ள, ‘ஹாத்வே கேபிள், டென் ஒர்க்ஸ், சிட்டி கேபிள்’ போன்ற பெரிய நிறு­வ­னங்­க­ளுடன் ஒப்­பந்தம் செய்து கொள்ள உள்­ளது.
அது மட்­டு­மின்றி, சிறிய நக­ரங்­களில் உள்ள, கேபிள் ஆப்­ப­ரேட்­டர்­க­ளையும் விட்டு வைக்க, ஆர்­ஜியோ தயா­ராக இல்லை. அடுத்த மூன்று ஆண்­டு­களில், 20 மில்­லியன் குடும்­பங்­களை, சந்­தா­தா­ர­ராக சேர்க்க, இலக்கு நிர்­ண­யித்து செயல்­பட்டு வரு­கி­றது.மேம்­பட்ட தொலை தொடர்பு சேவை, அதி­வி­ரை­வான இணை­ய­தள வசதி, தொலைக்­காட்­சியில் உலகத் தரத்­தி­லான பொழு­து­போக்கு சேவை என, பாய உள்ள, ஆர்­ஜி­யோவைக் கண்டு, போட்டி நிறு­வ­னங்­க­ளுக்கு இப்­போதே, ‘கிலி’ ஏற்­பட்­டுள்­ளது. இத்­த­னைக்கும், 10 ஆண்­டு­க­ளுக்கு முன் சகோ­தரர் முகேஷ் அம்­பா­னியை விட்டுப் பிரிந்து, சில ஆண்­டு­க­ளுக்கு முன், சமா­தா­ன­மான, அனில் அம்­பா­னியும், ‘அலர்ஜி’ அடைந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. அவர், தன், ரிலையன்ஸ் கம்­யூ­னி­கேஷன்ஸ் நிறு­வ­னத்தின் அடிப்­படை தொலை தொடர்பு வச­தி­களை, ஆர்­ஜி­யோ­வுக்கு வழங்­கு­வ­தற்கு ஒப்­பந்தம் செய்து கொண்­டுள்ளார்.
இந்­நி­லையில், ஆர்­ஜி­யோவின் அதி­ரடி நட­வ­டிக்­கை­களை பார்த்து, தன் வர்த்­த­கத்­தையும் வலுப்­ப­டுத்த முனைந்­துள்ளார்.சமீ­பத்தில், ‘சிஸ்­டெமா’ மொபைல் போன் சேவை நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­திய அனில் அம்­பானி, அடுத்து, ஏர்செல் நிறு­வ­னத்தை வாங்க உள்ளார் என, கூறப்­ப­டு­கி­றது. ஆக, இனி இந்­திய தொலை தொடர்பு சேவை துறையில், அம்­பானி சகோ­த­ரர்­களின் ஆட்சி தான்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)