பதிவு செய்த நாள்
10 மார்2016
07:29

புதுடில்லி : இந்தியாவிலிருந்து கோழி, முட்டை போன்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, குவைத் நாடு மீண்டும் தடை விதித்திருக்கிறது. திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் காரணமாக, இந்த தடையை அறிவித்திருக்கிறது, அந்நாட்டு அரசு. திரிபுராவிலுள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் இருப்பதை, கால்நடைத் துறை, கடந்த ஜனவரி மாத மத்தியில் உறுதி செய்தது. இதன் தொடர்ச்சியாகவே இறக்குமதிக்கு தடை விதித்திருக்கிறது குவைத். இந்தியாவிலிருந்து, குவைத்துக்கு குறைந்த அளவே நாம் ஏற்றுமதி செய்து வந்தாலும், பிற வளைகுடா நாடுகளுக்கான ஏற்றுமதியும் பாதிக்கப்படலாம் என, அஞ்சப்படுகிறது. இதேபோல் கடந்த 2013-ல் இந்தியாவிலிருந்து கோழி சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை, இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது குவைத்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|