பதிவு செய்த நாள்
10 மார்2016
07:31

புதுடில்லி : நாட்டின் உருக்கு இறக்குமதி, கடந்த, பிப்ரவரியில், 0.1 சதவீதம் குறைந்து, 0.91 மில்லியன் டன்னாக சரிவடைந்துள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், தொடர்ந்து, நான்காவது மாதமாக, உருக்கு இறக்குமதி குறைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து, குறைந்த விலையில் உருக்கு இறக்குமதியாவதால், தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக, பல உருக்கு நிறுவனங்கள், மத்திய அரசிடம் புகார் செய்தன. இதையடுத்து, 2015, செப்டம்பரில், மத்திய அரசு, ஒரு சில உருக்கு பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 20 சதவீதமாக உயர்த்தியது; அத்துடன், குறைந்தபட்ச விலையும் நிர்ணயித்தது. இதன் காரணமாக, உருக்கு இறக்குமதி செலவினம் அதிகரித்து, அதன் வரத்து குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|