பதிவு செய்த நாள்
10 மார்2016
07:33

புதுடில்லி : இந்தியர்கள் இன்டர்நெட் தொடர்பு வசதிக்காக, ‘3ஜி டேட்டா’வை உபயோகிப்பது, 85 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, ‘நோக்கியா எம்பிஐ டி’ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ‘‘இந்தியர்கள், சமீபகாலமாக அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இதனால், இன்டர்நெட் சேவையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். தற்போது, இன்னும் அதிக வேகம் வேண்டி, ‘3ஜி’ இணைப்பை பயன்படுத்துகின்றனர்,’’ என்கிறது இந்த ஆய்வு.‘‘இந்தியாவில் ஒருவர், ‘3ஜி டேட்டா’வை உபயோகிக்கும் அளவு மாதம் ஒன்றுக்கு, 753–எம்பி என்ற லெவலுக்கு அதிகரித்திருக்கிறது. ‘4ஜி’ இணைப்புகள் அதிகமாகும்போது, இன்னும் கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிற நாடுகளில் மாதம் ஒன்றுக்கு, 800–எம்பி யிலிருந்து, 1–ஜிபி வரை உபயோகிக்கின்றனர். இந்தியர்கள் கிட்டத்தட்ட அவர்களை நெருங்கிவிட்டனர்’’ என்கிறார் நோக்கியா துணைத் தலைவர் சந்தீப் கிரோட்ரா.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|