பதிவு செய்த நாள்
11 மார்2016
00:12

புதுடில்லி : இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக, சுணக்கத்தில் இருந்த, சூரிய மின் உற்பத்தி துறை, மத்திய அரசின் நடவடிக்கைகளால், சுறுசுறுப்பு அடைந்துள்ளது. இதனால், நாட்டின் சூரிய மின்சக்தி திறன், வரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வகையில் உயரும் என, இத்துறை சார்ந்த ஆலோசனை நிறுவன மான மெர்கம் கேப்பிடல் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: மத்திய அரசு, 2010ல், ஜவஹர்லால் நேரு சூரிய மின்சக்தி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம், 2022ம் ஆண்டுக்குள், 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திறனை எட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருந்தபோதி லும், போதிய வளர்ச்சியின்றி மந்தமாகவே இருந்தது. 2011 – 14 வரை வளர்ச்சியின்றி காணப்பட்ட, சூரிய மின் உற்பத்தி துறை, சுறுசுறுப்பு அடைந்தது.கடந்த, 2015ம் ஆண்டு, சூரிய மின் உற்பத்தி திட்டங்கள், 142 சதவீதம் அதிகரித்து, உற்பத்தி திறன், 2,133 மெகாவாட் உயர்ந்தது. இந்தாண்டு, இது, 100 சதவீதம் அதிகரித்து, 4,000 மெகாவாட் ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, மொத்த சூரிய மின் உற்பத்தி திறன், 5,632 மெகாவாட் ஆக உள்ளது. மேலும், 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்டங்கள், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவற்றில், பெரும்பான்மையான திட்டங்களில், அடுத்த ஆண்டு முதல் மின் உற்பத்தி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், அடுத்த சில மாதங்களில், மேலும், 8,400 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என, தெரிகிறது.இதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்ட வாய்ப்புள்ளது.இந்தாண்டு பட்ஜெட், ஏமாற்றத்தையே அளித்துள்ளது எனலாம்.
குறிப்பாக, 2017 முதல், சூரிய மின்சக்தி சாதனங்களின் தேய்மான வரிக் கழிவு, 80 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பை கூறலாம். இது, இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, கூடுதல் வரிச் சுமையை ஏற்படுத்தும். இருந்தபோதிலும், வரும், 2022க்குள், 8 சதவீத சூரிய மின்சக்தியை கட்டாயம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கொள்கை, அந்நிறுவனங்களின் வர்த்தகத்தை பெருக்க உதவும்.
அமெரிக்கா எதிர்ப்பு:சூரிய மின் உற்பத்திகான, ‘சோலார் செல்’களில், 50 சதவீதத்தை உள்நாட்டில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கொள்கைக்கு, அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு சாதகமாக, உலக வர்த்தக அமைப்பும், இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளது. இந்தியா, 50 சதவீதத்திற்கும் அதிகமான சோலார் செல்களை, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|